திராவிட இயக்கத்தை அழிக்க பார்க்கும் பாஜகவை கருணாநிதி விழாவிற்கு எப்படி அழைக்க முடியும்?- ஸ்டாலின்
திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் பாஜகவை கருணாநிதியின் வைரவிழாவுக்கு எப்படி அழைப்பது? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் பாஜகவை கருணாநிதியின் வைரவிழாவுக்கு எப்படி அழைப்பது? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் குளத்தை தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சி காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் செய்யவே நேரம் போதவில்லை, குடிநீர் பிரச்சினை பற்றியும் இன்றைய ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
கருணாநிதியின் வைரவிழாவிற்கு பாஜகவை அழைக்காதது பற்றி கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஸ்டாலின், திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் பாஜகவை வைரவிழாவுக்கு எப்படி அழைப்பது? என்றார்.
கருணாநிதியின் வைரவிழாவிற்கு அவர்களை அழைத்து மேடையில் அமரவைத்தார் அது அவர்களுக்கும் தர்மசங்கடம், அனைவருக்குமே தர்மசங்கடம் என்றார்.
அமைச்சர்கள் ஊழல் குறித்து ஆளுநரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், ஊழல் செய்வதில் தான் ஆட்சியாளர்களின் கவனம் உள்ளதாக தெரிவித்தார்.
-
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
பீகார் தேர்தலின் போது மோடி சொன்ன வார்த்தைகள்.. முடிந்தால் தமிழ்நாட்டிலும் பேசுங்க.. ஸ்டாலின் சவால்! -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்?











Click it and Unblock the Notifications