திருப்பத்தூரே திகைச்சிடுச்சு.. "அது" கிட்ட போய் பெட்டிஷனை தந்து.. பாஜக பிரபலம் பண்ண வேலையை பாருங்க
வேலூர்: சுரேஷ்குமார் கையில் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, திருப்பத்தூர் மாவட்ட மக்களை அதிர செய்துள்ளது.. பாஜக பிரமுகர் ஏன் இப்படி செய்தார்? என்ற ஆச்சரியமும் கிளம்பி உள்ளது,. அரசியல் அலட்சியத்தை விமர்சிக்கும் விதமாக சுரேஷ்குமார் திருப்பத்தூரில் செய்தது என்ன தெரியுமா?
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்... காக்கங்கரை பகுதியில் சமூக ஆர்வலராகவும், பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பிரிவு இணை செயலாளராகவும் செயற்பட்டு வருகிறார் சுரேஷ்குமார். தற்போது வித்தியாசமான சம்பவத்தை செய்து, திருப்பத்தூரில் கவனம் பெற்றுள்ளார். அது என்ன தெரியுமா?

பாஜக பிரமுகர் சுரேஷ்குமார்
பொதுவான பிரச்சனைகள், தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளிட்டவைகளுக்காக மாவட்ட ஆட்சியர்களிடம் பொதுமக்கள் மனு கொடுப்பது வழக்கம்..
அப்படி மனு கொடுத்தால் சம்பந்தப்பட்டட மாவட்ட ஆட்சியர் அதை பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புவர். உண்மையான பிரச்சனை இருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். நடவடிக்கை எடுக்கும் நேரம் சம்பவத்தின் தன்மை, சட்ட நடைமுறை, அதிகாரிகள் செயல்திறனை பொறுத்து மாறும்.
கலெக்டரிடம் மனு
அப்படித்தான் சுரேஷ் குமாரும், பல்வேறு பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியருக்கு மனுக்களின் மூலம் தெரிவித்து வந்துள்ளார்.. ஆனால், கடந்த காலத்தில் அவரது மனுக்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.. ஒவ்வொரு முறை மனு தந்தாலும், அந்த புகார் மனுவை விசாரிக்காதது சுரேஷ்குமாரை ஆத்திரப்படுத்தியுள்ளது.
இதனால் அதிருப்திக்கு உள்ளான சுரேஷ்குமார், நேற்று துரைநகர் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சென்றார்.. அங்கே புதைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் நாயுடு என அடையாளம் தெரியாத சடலத்திடம் மனு தந்தார்...
"பிணம் அவர்களே நீங்களாவது என் பெட்டிஷன் மீது நடவடிக்கை எடுங்க!" என்று சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பாலகிருஷ்ணன் நாயுடு என்ற உடலிடம் பெட்டிஷனை தந்து, தன்னுடைய ஆதங்கத்தை கொட்டினார்.
பாலகிருஷ்ணனின் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம், ரிங் ரோடு அமைப்பிற்கு போலி பர்மிட் கொடுத்து கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு, அதனை கனிமவளத்துறை கவனிக்காமல் களவாணித் துறையாக செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டி மனு தந்தாராம்.
பிணம் அவர்களே
அதேபோல், இரவு நேரங்களில் கனிமம் மற்றும் பல கொள்ளைகள் நடைபெற்று வருவது, சிண்டிகேட் அமைத்து புளியமரம் ஏலம் விடப்பட்டதை, தூய்மை பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட குப்பை தொட்டிகளை விற்பனை செய்தது போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் சுரேஷ்குமார் மனுக்களாக கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து தந்து வந்துள்ளார்.. ஆனால் எதற்குமே நடவடிக்கையும், விசாரணையும் இல்லை என்பதால் நொந்து போய் சுடுகாட்டில் பிணத்திடம் மனு தந்துள்ளார்..
அவரின் இந்த செயல்பாடு, அரசியல் மற்றும் சமூக ஒழுங்கு தொடர்பான முக்கியமான பிரச்சனைகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதுடன், பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
-
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்












Click it and Unblock the Notifications