Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL: ஒரே மேட்ச்.. ஆரஞ்சு, பர்ப்பிள் கேப் இரண்டும் இவர் வசம்.. மும்பை இந்தியன்ஸ்-ஐ கதறவிட்ட கிளர்க்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகளிர் ஐபிஎல் (WPL) 2026 தொடரின் முதல் போட்டியிலேயே கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து கிடைத்துள்ளது. கடைசிப் பந்து வரை சென்ற பரபரப்பான ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மொத்தச் சொந்தக்காரர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் நாடின் டி கிளர்க் என்றால் அது மிகையல்ல. பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள், பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் என மைதானத்தில் அபார ஆல்-ரவுண்டர் ஆட்டம் ஆடினார்.


WPL 2026 Nadine de Klerk s Historic All-Round Show Leads RCB to Thrilling Win Over Mumbai Indians

நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
மும்பை அணியைக் கட்டுப்படுத்தியதில் நாடின் டி கிளர்க்கின் பங்கு மிக முக்கியமானது. தனது துல்லியமான வேகப்பந்து வீச்சால் 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆர்சிபி அணி, ஒரு கட்டத்தில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறியது. அப்போது களமிறங்கிய நாடின் டி கிளர்க், நங்கூரம் போல் நிலைத்து நின்று அணியை மீட்டார். ஆட்டத்தின் உச்சக்கட்டமாக, வெற்றிக்குக் கடைசி 4 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

தோல்வி உறுதி என ரசிகர்கள் நினைத்த நேரத்தில், நாடின் டி கிளர்க் அந்த 4 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசி, கடைசிப் பந்தில் அணியை வெற்றி பெறச் செய்தார். 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் குவித்த அவர் ஆட்டநாயகியாக ஜொலித்தார்.

இந்த ஒரு போட்டியின் மூலம், மகளிர் ஐபிஎல் தொடரின் அதிக ரன் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பி மற்றும் அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்ப்பிள் தொப்பி ஆகிய இரண்டையும் நாடின் டி கிளர்க் தன்வசப்படுத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அவர் பேட்டிங்கில் 63 ரன்களும், பந்துவீச்சில் 4 விக்கெட்களும் வீழ்த்தினார்.

WPL வரலாற்றில் ஹர்மன்பிரீத் கவுர் புதிய சாதனை.. 36 வயதிலும் சாதிக்கும் சிங்கப்பெண்

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் தோல்வியுடன் இந்தச் சீசனைத் தொடங்கியுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய அணிகள் இன்னும் களமிறங்கவில்லை.

Credit: Mykhel

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+