Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jana Nayagan OTT: அமேசான் ஓடிடியில் ஜனநாயகன் ரிலீஸ்? அதுவும் இவ்வளவு சீக்கிரமாகவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இந்த வாரம், ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. பொங்கல் வெளியீடாக களம் இறங்கும் இந்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமை தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Jana Nayagan OTT Vijay

அமேசான் பிரைமில் ஜனநாயகன்

சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஒப்பந்தம் சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், விஜய் நடித்த படங்களுக்கு ஓடிடியில் இருக்கும் மவுசு தெரிகிறது.

30 நாளில் ஓடிடி

பொதுவாக பெரிய படங்களுக்கு 8 வார இடைவெளிக்குப் பிறகே ஓடிடி வெளியீடு நடைபெறும். ஆனால், ஜனநாயகன் விஷயத்தில் அந்த நடைமுறை மாற்றப்படலாம் என்ற பேச்சு தற்போது தீவிரமாக உள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களின் படி, திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்குள்ளேயே, அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ஜனநாயகன் அமேசான் பிரைமில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக அமேசான் பிரைம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நாசர், நரேன், பிரியாமணி, சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரசியல் பின்னணி, சமூக கருத்துக்கள் மற்றும் ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் கதையாக ஜனநாயகன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அனிருத் இசை

ஜனநாயகன் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, விஜயின் ஸ்டைல், பாடல் காட்சிகள் மற்றும் பின்னணி இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

பகவந்த் கேசரி ஒப்பீடு

ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்துடன் ஒப்பிடப்பட்டு வரும் நிலையில், சில ரசிகர்கள் கதையை புரிந்துகொள்ள அந்த படத்தை ஓடிடியில் மீண்டும் பார்க்க தொடங்கியுள்ளனர். இதனால், அமேசான் பிரைம் தளத்திற்கு கூடுதல் பார்வையாளர்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனநாயகன் ஓடிடியில் வெளியானால், இந்த ஒப்பீடு இன்னும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் ஜனநாயகன், தொடர்ந்து 10 நாட்கள் வலுவான வசூலை பதிவு செய்தால், ஓடிடி வெளியீடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், தற்போதைய தகவல்களின் அடிப்படையில் பிப்ரவரி முதல் வாரம் ஓடிடி ரிலீஸ் என்பது ரசிகர்களிடையே பரவலாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+