தமிழீழம் என்ற வார்த்தைக்கு தடை இல்லை: இலங்கை தேர்தல் அதிகாரி தகவல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழீழம் என்ற வார்த்தைக்கு தடை விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று இலங்கை பிரதித் தேர்தல் ஆணையர் எம்.எம்.மொஹ மட் தெரிவித்துள்ளார்.

பிரிவினையைத் தூண்டும் வகையில் தமிழ் ஈழம் என்ற அர்த்தம் கொண்ட அரசியல் கட்சிகளைத் தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகவும், இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் இலங்கையில் தகவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹ மட் கூறுகையில்,

தேர்தல் ஆணையம் இன்னும் அது போன்ற ஒரு முடிவை எடுக்கவில்லை. ஆணையாளரும் அது குறித்து பரிசீலனை செய்யவில்லை என்றார்.

இதே கருத்தை ஆதரிக்கும் வகையில், தமிழ் ஈழம் என்ற அர்த்தம் கொண்ட அரசியல் கட்சிகளை தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையம் தமக்கு இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+