சன் குரூப்பின் 'சூப்பர் ஆஃபர்'.. ஸ்பைஸ்ஜெட் விமானக் கட்டணத்தை 75% குறைத்தது!
மும்பை: சன் குழுமத்தின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கோடை காலத்தை முன்னிட்டு தனது விமான பயணக் கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது. அதாவது 75 சதவீத அளவுக்குக் கட்டணக் குறைப்பை அது அறிவித்துள்ளது.
கோடைகாலத்தில் பல்வேறு ஊர்களுக்கும் படையெடுக்கும் மக்களை மொத்தமாக தனது விமானத்தில் அடைக்க நினைக்கும் சன் குழுமத்தின் அதிரடி முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
கடந்த ஒன்றரை மாதத்தில் தனது கோடைகால விமான சேவைகளுக்கான பயணக் கட்டணத்தை ஸ்பைஸ்ஜெட் குறைப்பது இது 3வது முறையாகும்.

சூப்பர் சம்மர் சேல்
சூப்பர் சம்மர் சேல் என்ற பெயரில் இந்த பயணக் கட்டண சலுகையை ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. இந்த சலுகையானது வருகிற புதன்கிழமை நள்ளிரவு வரை அமலில் இருக்குமாம். அதற்குள் புக் செய்வோர் இந்த 75 சதவீத சலுகையை அள்ளிக் கொள்ளலாம்.

அடிப்படைக் கட்டணத்தில்
டிக்கெட்டின் அடிப்படைக் கட்டணத்தில் இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ம் தேதி வரை
ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான பயண காலத்திற்கான சலுகையாகும் இது.

ஏற்கனவே வெற்றி பெற்றதால்
ஏற்கனவே இதேபோல இரண்டு சலுகைகளை ஸ்பைஸ்ஜெட் அறிவித்து அவை வெற்றியும், வரவேற்பும் பெற்றதால் தற்போது இந்த புதிய அதிரடி சலுகையை ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளதாம்.

எல்லோருக்கும் லாபமே
இந்த புதிய சலுகையானது விமான நிறுவனம், பயணிகள், சுற்றுலாத்துறை ஆகிய அனைவருக்குமே லாபம் அளிக்கக் கூடியதாக அமையும் என்பது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கூற்றாகும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications