ரூ.210 கோடிக்கு வந்த மின்கட்டணம்! பார்த்ததுமே தலைசுற்றிப்போன தொழிலதிபர்.. மறக்கவே முடியாத சம்பவம்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் மின்கட்டணத்துக்கான பில் ரூ.210 கோடிக்கு வந்ததால் தொழிலதிபர் அதிர்ந்து போனார். இதுபற்றி புகாரளித்ததற்கு மின்வாரியம் என்ன சொன்னது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
பொதுவாக வீடு, கடைகளுக்கு மின்கட்டணம் என்பது நாம் பயன்படுத்திய மின்சாரத்துக்கு ஏற்ப வரும். சில நேரங்களில் தவறுதலாக மின்கட்டணம் என்பது அதிகமாக வரும். இதுபற்றி நாம் பலமுறை கேள்வி பட்டு இருப்போம். வீட்டில் ஒரேயொரு பல்பு பயன்படுத்தும் நபருக்கு லட்சக்கணக்கில் மின்கட்டணம் வந்தது என்ற செய்தியை கூட நாம் படித்து இருப்போம்.

ஆனால் இப்போது தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.210 கோடிக்கு மின்கட்டணம் வந்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியை சேர்ந்த லிலித் தீமன். தொழிலதிபரான இவர் கான்கிரீட் பிசினஸ் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டது. அப்போது ரூ.210 கோடிக்கு பில் வந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ரூ.210 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரத்து 405க்கு மின்கட்டண பில் வந்தது.
இதுபற்றி அறிந்தவுடன் லலித் தீமன் கடும் அதிர்ச்சியடைந்தார். மின்கட்டணத்துக்கு ரூ.210 கோடியா? அவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தியதே இல்லையே? என்று உடனடியாக அவர் மின்வாரியத்திடம் சென்று புகாரளித்தார். அவரது புகாரை பெற்ற மின்வாரியம் உடனடியாக பரிசோதனை செய்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவருக்கு அவ்வளவு தொகை வந்திருப்பதாக கூறியது.
இதையடுத்து அந்த மின்வாரிய அதிகாரிகள் அவருக்கான கட்டணத்தை குறைத்தார். லிலித் தீமன் வீட்டில் பயன்படுத்திய மின்சாரத்துக்கான உண்மைதொகையான ரூ.4,047 மட்டும் வசூலிக்கப்பட்டது. இருப்பினும் லலித் தீமன் வீட்டுக்கு ரூ.210 கோடிக்கு வந்த பில் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் மின்வாரியத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே தான் சம்பவம் பற்றி விசாரித்த மின்வாரியம் ஹமிர்பூர் மண்டல சூப்பிரண்ட் இன்ஜினியருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஆஷிஸ் கபூர் கூறுகையில், ‛‛மீட்டர் ரீடிங்கில் இருந்து எடுக்கப்பட்ட அளவு சிஸ்டமில் தவறாக குறிப்பிடப்பட்டு இருக்கலாம். இல்லாவிட்டால் சாப்ட்வேர் பிரச்சனையால் தவறான பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், ஊழியர்கள் மீது தவறு இருப்பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
-
மின் வெட்டு: "திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி": அமைச்சர் நிர்மல்குமார் ஷாக் தகவல்! -
லோ வோல்டேஜ்.. ஏசி ட்ரிபிள் பூஸ்டரே திணறுது.. ஏசி வாங்கியும் இப்படி ஒரு சிக்கலா? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications