ஜெய்ஸ்ரீ ராம் சொல்லியே ஆகனும்.. காஷ்மீர் வியாபாரிகளை துன்புறுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதியை பாருங்க
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஷால் வியாபாரம் செய்ய வந்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தந்தை - மகன் ஆகியோரை மிரட்டி ‛ஜெய் ஸ்ரீராம்' சொல்லும்படி கட்டாயப்படுத்திய பெண் பஞ்சாயத்து உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அந்த பெண் மன்னிப்பு கேட்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ரா அருகே கந்தர் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் சுஷ்மா தேவி. இவர் பிளாக் டெவலப்மென்ட் கமிட்டியின் உறுப்பினராக உள்ளார். இந்த பகுதியில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஷால், போர்வை வியாபாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் காஷ்மீரின் குப்வாரா பகுதியை சேர்ந்த அலி முகமது மிர் (வயது 55) என்பவர் தனது மகன் பிர்டோஸ் அகமது மிர் (20) என்பவருடன் சேர்ந்து ஷால் வியாபாரம் செய்து வந்தார்.
அப்போது ஷால் வியாபாரிகளான தந்தை - மகன் இருவரையும் சுஷ்மா தேவி அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். இந்த, ‛‛நாம் இந்தியாவில் இருக்கிறோம். இந்தியர்கள் என்பதை நிரூபிக்க ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள். இதற்கு அவர்கள், ‛ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்கிறீர்களா? ஆனால் நான் வேறு மதத்தை சேர்ந்தவன். உங்களிடம் ஒருவர் குரான் ஓத சொன்னால் செய்வீர்களா?'' என பதில் கேள்வி கேட்டார்.
இதையடுத்து சுஷ்மா தேவி, ‛‛இவர்கள் 2 பேரிடம் எந்த பொருட்களையும் யாரும் வாங்க கூடாது. இருவரும் இந்த ஏரியாவுக்கு மீண்டும் வியாபாரம் செய்ய வரக்கூடாது. '' என எச்சரிக்கை செய்துள்ளார். அதோடு இந்த சம்பவம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியானது. அதோடு ஜம்மு மற்றும் காஷ்மீர் மாணவர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாசீர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இதனால் வீடியோ வேகமாக பரவ தொடங்கியது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட 2 வியாபாரிகளும் ஆலம்பூர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மா தேவியை பிடித்து விசாரித்தனர்.
இதுபற்றி காங்க்ரா எஸ்பி ஷாலினி அக்னிகோத்ரி கூறுகையில், ‛‛சம்பவம் தொடர்பா சுஷ்மா தேவி மீது பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப்பிரிவு 299ன்படி வழக்குப்பதிவு (குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கையை அவமானப்படுத்துதல் அல்லது மதத்தை அவமானப்படுத்துதல்) செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
மேலும் சுஷ்மா தேவி மன்னிப்பு கோரி வீடியோ 49 செகண்ட் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் சுஷ்மா தேவி, ‛‛நான் எனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கிறேன். நான் அவர்களிடம் என் வீட்டுக்கு வரக்கூடாது. நாங்கள் சில பெண்கள் தனியாக வசிக்கிறோம். வெளிநபர்களை கண்டால் பயம் இருப்பதாக கூறினேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பாதிப்புக்கு உள்ளான அலி முகமது மிர் கூறுகையில், ‛‛காஷ்மீரில் உள்ள எனது குடும்பத்தினர் கவலையடைவார்கள் என்பதால் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட வேண்டாம் என்று கெஞ்சினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. கடந்த 25ம் தேதி மாலையில் எனது உறவினர் பஷ்மிர் அகமது மிர் என்பவர் இமாச்சலில் துணி வியாபாரம் செய்கிறார். அவர் என்னிடம் இந்த வீடியோவை காட்டினார். அதோடு என்னையும், என் மகனையும் காவல் நிலையத்துக்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினார். காவல் நிலையம் சென்ற நிலையில் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
தற்போது காஷ்மீரில் குளிர்காலம். இந்த காலத்தில் குளிர் அதிகம் இருக்கும். இதனால் குளிரில் இருந்து விடுபட லூதியானாவில் துணிகள் வாங்கி இமாச்சல பிரதேசத்தில் நாங்கள் விபற்னை செய்வோம். எனது மூத்த மகன் ஜம்மு காஷ்மீரில் போலீசாக பணியாற்றி வருகிறார். நான் என் இளைய மகனுடன் இங்கு வந்து வியாபாரம் செய்தேன். கடந்த 30 ஆண்டுகளாக இங்குவந்து செல்கிறோம். ஆனால் இப்போது தான் இப்படியான சம்பவத்தை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். தவறு செய்த டிடி (சகோதரி) மன்னிப்பு கேட்டுவிட்டார். இதனை நாங்கள் பெரிதாக்க விரும்பவில்லை'' என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications