ஜார்க்கண்டில் 10 வருஷமா நாங்கதான் கெத்து.. பாஜகவை அலறவிட்ட ஹேமந்த் சோரன்
ராஞ்சி: ஜார்க்கண்ட் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை எடுத்தது. ஆனால் ஜேஎம்எம் தலைமையிலான இந்தியா கூட்டணி திடீர் கம்பேக் கொடுத்து பெரும்பான்மையை கடந்து அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20 ஆம் தேதியும் நடைபெற்றது.

ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா (JMM), காங்கிரஸ் இந்தியா கூட்டணி மற்றும் பாஜக, அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ஜேஎம்எம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்குமா அல்லது பாஜக ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எக்ஸிட் போல் முடிவில், இந்தியா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதும் கடுமையான போட்டி நிலவியது. தொடக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியானது. பிறகு இந்தியா கூட்டணி எதிர்பாராத வகையில் கம்பேக் கொடுத்து முன்னிலை எடுத்தது. இந்தியா கூட்டணி மெஜாரிட்டியை கடந்து சுமார் 57 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஜேஎம்எம் 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக 21 தொகுதிகளில் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
முதல்வர் ஹேமந்த் சோரன் பர்ஹைட் தொகுதியில் 39,791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிராய்கெல்லா தொகுதியில் பாஜக சம்பாய் சோரன், ஜேஎம்எம் கணேஷ் மஹாலி இடையே கடுமையான போட்டி நிலவியது. சம்பாய் சோரன் 20,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் ஜேஎம்எம் தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டது, அவர் மீது ஊழல் முறைகேடு புகாரை பூதாகரப்படுத்தியது என பாஜக பல வியூகங்களை கையாண்டது. ஜேஎம்எம் கட்சியில் இருந்து சம்பாய் சோரன் உள்ளிட்ட சீனியர்களையும் பாஜக தங்கள் பக்கம் இழுத்தது.
பாஜக தேர்தலுக்காக வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோரை அழைத்து வந்து, ரூ.500 கோடி வரை செலவு செய்கிறது என ஹேமந்த் சொரன் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அது பாஜகவின் திட்டங்களை எல்லாம் தவிடிபொடியாக்கி ஹேமந்த் சொரன் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications