ஜார்க்கண்ட்டில் வெற்றியை தீர்மானிக்கும் அந்த 1% வாக்கு! ஜஸ்ட் மிஸ்ஸில் தோற்கும் பாஜக! லோக்போல் சர்வே
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகளை லோக்போல் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அங்கு இந்தியா கூட்டணி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்ற போதிலும், இந்தியா கூட்டணி நூலிழையில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்லும் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் முதல்வராக இருக்கிறார். அங்கு ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. பாஜக அங்குப் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது.

இந்த ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தீவிர பிரச்சாரம் அங்கு நடந்து வருகிறது.
ஜார்க்கண்ட் தேர்தல்: இதற்கிடையே ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தலில் யார் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து கருத்துக்கணிப்பு முடிவுகளை லோக் போல் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜார்க்கண்ட்டில் கடும் போட்டி இருக்கும் என்ற போதிலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் இந்தியா கூட்டணி வெல்லும் என்ற அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
லோக்போல் சர்வே: ஜார்க்கண்டில் மாநிலத்தில் மொத்தம் 81 சீட்கள் உள்ளது. அதில் எந்தவொரு கட்சி அல்லது கூட்டணி 41 இடங்களில் வெல்கிறதோ, அந்தக் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும். அதன்படி இந்தியா கூட்டணி 41- 44 சீட்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடும் போட்டியைக் கொடுக்கும் பாஜக கூட்டணி 36- 39 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத கட்சிகள் 3- 4 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு வங்கியைப் பொறுத்த வரையிலும் கூட கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே வாக்கு வங்கியில் வேறுபாடு இருக்கிறது. அதுவே வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதாக இருப்பதாக லோக்போல் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு வங்கி: ஆளும் இந்தியா கூட்டணி 39- 41% வரையிலான வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அங்கு 28- 40% வரையிலான வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 18-20% வரையிலான வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 81 இடங்கள் உள்ளன. அங்கே 41 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது ஆட்சியைப் பிடிக்கும்.. அங்கு இந்த முறை நவ. 13 மற்றும் நவ. 20 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நவ. 23ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக ஜேஎம்எம் கட்சி 30 சீட்களில் வென்று இருந்தது. அதைத் தொடர்ந்து பாஜக 25 சீட்களிலும், காங்கிரஸ் 16 சீட்களிலும் வென்று இருந்தது. அதேபோல ஜேவிஎம்பி என்ற கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு என்ற கட்சி 2 இடங்களிலும் வென்று இருந்தது. அதைத் தொடர்ந்தே அங்குக் கூட்டணி ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications