குறி வெச்சா இரை விழணும்.. ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா முதல்வர் ஹேமந்த் சோரன்.. பரபரக்கும் ஜார்க்கண்ட்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பர்ஹைட் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியையும் தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20 ஆம் தேதியும் நடைபெற்றது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.86 சதவீதம், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 67.59 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்சா (JMM) கட்சி, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு,தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஜேஎம்எம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்குமா அல்லது பாஜக ஆட்சியை பிடிக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்துக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எக்ஸிட் போல் முடிவுகளும் ஜேஎம்எம், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கூறின. ஒரு எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக கூட்டணியும், சில எக்ஸிட் போல் முடிவுகளில் ஜேஎம்எம் கூட்டணி வெற்றி பெறும் என்றும் கூறினர்.
பர்ஹைட் தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் பர்ஹைட் தொகுதியில் போட்டியிடுகிறார். பர்ஹைட் பட்டியல் பழங்குடிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். சஹிபகாங், கோடா மாவட்டங்களை உள்ளடக்கியது. ஹேமந்த் கடந்த 2014, 2019 சட்டமன்ற தேர்தல்களில் பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பர்ஹைட் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக கூட்டணியில் கமலியின் ஹெம்பரோம் போட்டியிடுகிறார். பர்ஹைட் ஜேஎம்எம் வலுவாக இருக்கும் தொகுதி. ஆனாலும் ஹேமந்துக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை பாஜக தீவிர பிரச்சாரமாக முன்வைத்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு, கைது உள்ளிட்வை ஹேமந்துக்கு சவாலான மாறியுள்ளன. இதை கடந்து அவர் பர்ஹைட்டில் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தொடங்குவதற்க முன்பு, பர்ஹைட் தொகுதியில் ஹேமந்த் சோரனுக்கு எதிராக போட்டியிட பாஜகவுக்கு வேட்பாளர்களே கிடைக்கவில்லை என ஜேஎம்எம் கிண்டலடித்தனர்.
ஹேமந்தை எதிர்த்து போட்டியிடும் கமலியன் தொகுதிக்குள் நன்கு அறிமுகமானவர். 2019 சட்டமன்ற தேர்தலில் இதே பர்ஹைட் தொகுதியில் அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் சார்பில் போட்டியிட்டு 2,573 வாக்குகளை மட்டுமே பெற்றார். ஆசிரியரான இவர் பிறகு பாஜகவில் இணைந்தார். அதனால் இந்தமுறை அவர் வலுவான போட்டி கொடுப்பார் என பாஜக நம்புகிறது.
பர்ஹைட் தொகுதியில் நடந்த வாக்குப்பதிவில் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 1990 ஆம் ஆண்டு முதல் பர்ஹைட் தொகுதியில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஜேஎம்எம் வென்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஹேமந்த் சோரன் முன்னிலை வகித்து வருகிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications