ஜார்க்கண்ட்டில் சிக்சர் அடிக்கும் பாஜக! படுதோல்வி அடையும் ஜேஎம்எம்-காங். கூட்டணி! புதிய எக்ஸிட் போல்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கு மொத்தம் 82 சீட்கள் இருக்கும் நிலையில், 41 தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். இதற்கிடையே சுதர்சன் நியூஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் பாஜக கூட்டணி எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.. அங்கு எதிர்க்கட்சி வரிசையில் பாஜக உள்ளது.

இந்தி மாநிலங்களில் ஒன்றாக ஜார்க்கண்ட் இருப்பதால் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. மறுபுறம், கடந்த முறையைப் போல வெல்ல வேண்டும் என்பதே இலக்காகக் கொண்டு ஜேஎம்எம்- காங்கிரஸ் போட்டியிடுகிறது.
ஜார்கண்ட் தேர்தல்: அங்கு மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 43 தொகுதிகளில் நவ. 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் சுமார் 64% வாக்குகள் பதிவாகியிருந்தது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மீதமுள்ள 38 தொகுதிகளில் நடந்தது. வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்த நிலையில், மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். அங்கு வரும் நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதன்படி சுதர்சன் நியூஸ் நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் பாஜக கூட்டணி எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியை இழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்ல போவது யார்: அங்கு மொத்தம் 81 சீட்கள் இருக்கும் நிலையில், 41 இடங்களைக் கைப்பற்றும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். சுதர்சன் நியூஸ் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி 46 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ்- ஜேஎம்எம் கூட்டணி 33 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 2 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்: கடந்த 2019ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. அதிகபட்சமாக ஜேஎம்எம் கட்சி 30 சீட்களில் வென்றது. காங்கிரஸ் 16 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது. இதனால் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்தது. பாஜக 25 சீட்களில் மட்டுமே வென்ற நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டி இருந்தது. அதேபோல ஜேவிஎம்பி கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யு என்ற கட்சி 2 இடங்களிலும் வென்று இருந்தது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications