ஜார்க்கண்ட் தேர்தல்: ஹேமந்த் - சம்பாய் சோரன் வரை! முக்கிய புள்ளிகள் வெற்றி பெற்றார்களா? இதோ விவரம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஜார்க்கண்டில் கவனம் பெற்ற்ற 10 தொகுதிகள் பற்றியும் அதில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி விவரத்தையும் பார்க்கலாம்.
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அடிக்கடி அரசியல் குழப்பங்கள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாகவே ஜார்க்கண்ட் இதுவரை இருந்துள்ளது. ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்க முறைகேடு புகாரில் சிக்கிய ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால், அவரது நம்பிக்கைக்குரியவரான சம்பாய் சோரன் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை ஆனதும், முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமர்ந்தார். பதவி பறிபோன அதிருப்தியில் இருந்த சம்பாய் சோரன் பாஜகவில் இணைந்து போட்டியிட்டுள்ளார். ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணி மீதான அதிருப்தி போன்றவற்றால் பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பேசபப்ட்டது. கருத்துக்கணிப்புகளும் இதையே கூறின.
ஆனால், இதற்கு எல்லாம் மாறாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் 55 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. ஜார்க்கண்டில் கவனம் பெற்றுள்ள 10 தொகுதிகள் பற்றியும் அதில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற விவரத்தையும் காணலாம்.
1. சம்பாய் சோரன் (பாஜக) - செரைகெல்லா தொகுதி- பாஜக வெற்றி
2.ஹேமந்த் சோரன் (பர்ஹைத்) ஜேஎம்எம்- வெற்றி
3. சிதா ராமு (ஜம்தரா)- பாஜக- தோல்வி
4. கல்பனா முர்மு சோரன் ( கண்டே) ஜே.எம்எம் கட்சி- வெற்றி
5. பாபு லால் சோரன் ( காட்சிலா தொகுதி) பாஜக- தோல்வி
6.புர்னிமா சாகு (ஜாம்ஷெட்பூர் கிழக்கு) பாஜக- வெற்றி
7. பாபு லால் மராண்டி ( தன்வார் தொகுதி) பாஜக- வெற்றி
8.பசந்த் சோரன் ( தும்கா -எஸ்.டி) ஜே.எம்.எம்- வெற்றி
9.சுதேஷ் குமார் மஹோதா( சில்லி) ஏ ஜே எஸ்.யூ கட்சி- தோல்வி
10. கீதா கோரா (ஜெகன்னாத்பூர்) பாஜக- தோல்வி
ஜார்க்கண்டில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 41 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. தற்போது ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications