மாப்பிள்ளைக்கு அவசரம்.. பறந்து வந்த மெசேஜ்.. கொல்கத்தா அருகே இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே
கொல்கத்தா: மும்பையைச் சேர்ந்த சந்திரசேகர், தனது திருமணத்திற்கு குடும்பத்தோடு ரயிலில் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தி நோக்கி சென்றுள்ளார். ஆனால் ரயில் மிகவும் தாமதமாகவே சென்றுள்ளது. இதனால் கவலை அடைந்த மணமகன் குறித்த நேரத்தில் தாலி கட்ட போக முடியாது என்பதை அறிந்து ரயில்வேக்கு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ரயில்வே துறை நிறைவேற்றியதால், திருமணத்துக்கு உரிய நேரத்தில் சென்று தாலி கட்டினார்
மும்பையைச் சேர்ந்த சந்திரசேகர் வாக் என்பவருக்கு கல்யாணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சந்திரசேகர் வாவ், தனது குடும்பத்தினர் 35 பேருடன் அசாம் மாநிலம் கவுகாத்தி நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் கல்யாண் ரயில்வே நிலையத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுரா சென்று, அங்கிருந்து கவுகாத்தி செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்.

இந்தநிலையில், கல்யாண் - ஹவுரா இடையே கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். ஆனால் ரயில் மிகவும் தாமதமாக சென்றுள்ளது. அதாவது, ஹவுரா ரயில் நிலையத்தை சுமார் 3 மணி நேர தாமதத்துக்குப் பிறகே சென்றடையும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமகன், மாலை 4 மணிக்கு கவுகாத்தி செல்லும் சாரிகாட் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார். ஒருவேளை அந்த ரயிலை பிடிக்க முடியவில்லை என்றால் குடும்பத்தோடு சென்று கொண்டிருக்கும் இவர் திருமணத்தில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்..
என்ன செய்வது என தெரியாமல் ரயிலுக்குள் மாட்டிக் கொண்ட மணமகன் உடனே ரயில்வேத் துறைக்கு எக்ஸ் பக்கத்தில் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதில் தன்னுடைய ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை பதிவிட்டு தன்னுடைய நிலைமையையும் எடுத்துரைத்திருக்கிறார்.
உடனே மணமகனின் கோரிக்கை உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து கீதாஞ்சலி ரயில் டிரைவருக்கு விரைவாக ரயிலை இயக்க உத்தரவிடப்பட்டது. மறுபுறம் சாரிகாட் ரயில் தாமதமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து ரயில்வேயின் சந்திரசேகர வாக் குடும்பத்தினர் ஹவுரா ரயில் நிலையம் வந்து சாரிகாட் ரயிலில் ஏறி திருமணத்துக்கு உரிய நேரத்துக்கு சென்று தாலி கட்டியிருக்கிகறார். அவர் ரயில்வே துறைக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications