கணவனை உதறிய மனைவி.. 2 மாதத்தில் 2 திருமணம் செய்து.. தலையை பிய்த்து கொண்ட போலீஸ்.. கடைசியில என்னாச்சு
போபால்: 2 கணவர்களை திருமணம் செய்த இளம் பெண்ணால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. இது தொடர்பான புகார் போலீஸ் வரை சென்று, அதிகாரிகள் தலையிட்டு, இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்து வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது?
மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள போபால் என்ற பகுதியை சார்ந்தவர் ரோகித். இவரது மனைவி பெயர் ரோகினி.. இந்த பெண்ணும், ரோகித் வசித்து வரும் பகுதியை சேர்ந்தவர்தான். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது

புதுமண தம்பதி: இதையடுத்து புதுமணத் தம்பதி இருவரும், தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக துவங்கினார்கள்.. இந்நிலையில், திடீரென ஒருநாள் ரோகினி காணாமல் போய்விட்டார். வீட்டில் மனைவியை காணாமல் பதறிப்போன கணவர், பல இடங்களில் தேடினார்.. ஆனால், ரோகினி எங்கேயுமே கிடைக்கவில்லை.
அதாவது, 1 வாரத்துக்கு முன்பு, தன்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை பார்த்துவிட்டு வருவதாகவும் கிளம்பி சென்றுள்ளார் ரோகினி. ஆனால், அதற்கு பிறகுதான் வீட்டுக்கு திரும்பவில்லையாம்.. நீண்ட நாட்கள் காத்திருந்த ரோகித், சந்தேகத்தின்பேரில் மாமியார் வீட்டுக்கே சென்றபோதுதான், ரோகினி அங்கேயும் இல்லை என்பது தெரியவந்தது.
ரோகினி: இதனால், ரோகித்தும், ரோகினியின் குடும்பத்தினரும் சேர்ந்தே போலீசில் புகார் தந்துள்ளனர். இந்த புகாரின்பேரில், போலீசாரும் வழக்கு பதிவு செய்து, மாயமான ரோகினியை தேடி வந்தனர்.. அப்போதுதான், ரோகினிக்கு இன்னொரு நபருடன் 4 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளதாக, போலீசாருக்கு தெரியவந்தது. அந்த 2வது கணவர் பெயர் ராகுல்.. அவரை திருமணம் செய்து அவருடன்தான் ரோகிணி இத்தனை நாளும் வாழ்ந்து வந்துள்ளார்.
தவறான உறவு: இதையடுத்து போலீசார் ரோகினியிடம் இதுகுறித்து விசாரித்திருக்கிறார்கள்.. அதற்கு ரோகினி, 8 வருடமாக முதல் கணவர் ரோகித்துக்கு, அதே பகுதியில் வசிக்கும் இன்னொரு பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்ததால்தான், வீட்டை விட்டு வெளியேறியதாகவும், எனவே, கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும் பிடிவாதமாக சொன்னார்.
இதைக்கேட்ட ரோகித் அதிர்ச்சியடைந்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு ரோகினியை அழைத்தார். இதனால், ரோகித்துக்கும், ராகுலுக்கும் வாக்குவாதம் வெடிக்க துவங்கியது.
பிடிவாதம்: பிரச்சனையை சுமூகமாக முடிக்க வந்த போலீசாரோ, ரோகினியின் பிடிவாதம், ராகுல் தரப்பின் ஆவேசத்தை கண்டு, அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இவர்கள் அனைவரிடமும் அதிகாரிகளே நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலீசாரிடம் ரோகினி, "முதல் கணவனுடன் செல்ல மாட்டேன், 2வது கணவருடன் செல்லவே விருப்பம்" என்று மீண்டும் உறுதியாக சொன்னார்.. இதனால் செய்வதறியாமல் விழித்த போலீசார், விவாகரத்து இல்லாமல் வேறொரு ஆணுடன் திருமணம் செய்வது சட்டவிரோதமானது என்று அறிவுறுத்தினார்கள்..
அதிருப்தி: உடனே ரோகினி, விரைவில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிடுவதாக உறுதியாக சொன்னார். இதனால், போலீசாரும் 2வது கணவருடன் வாழ ரோகினியை அனுப்பி வைத்தனர். ரோகினியை எப்படியாவது தன்னுடன் அழைத்து சென்றுவிட வேண்டும் என்று கடைசிவரை எதிர்பார்த்த, ரோகித் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications