முதலில் இந்தியா.. இப்போது ஆப்கான்.. பாகிஸ்தான் பேண்டை உருவிய தாலிபான்கள்! இது எவ்வளவு பெரிய அசிங்கம்
இஸ்லாமாபாத்: பாதுகாப்புத் துறையில் பாகிஸ்தான் இந்தாண்டு மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவிடம் அடி வாங்கிய பாகிஸ்தான் இப்போது தாலிபான்களிடமும் அடி வாங்கி போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது. எல்லா இடங்களிலும் சுற்றிச் சுற்றி அடிவாங்கும் அளவுக்கே பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை இருக்கிறது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் எப்போதும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நாடு. இதன் காரணமாகவே ஒரே நாளில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றாலும் இந்தியா அடைந்த வளர்ச்சியைப் பாகிஸ்தானால் அடைய முடியவில்லை. பொருளாதார ரீதியாகத் திணறும் பாகிஸ்தான், பல உலக நாடுகளிடம் கடன் வாங்கி மோசமான நிலையில் இருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம்
இந்தாண்டு பாதுகாப்புத் துறையிலும் பாகிஸ்தான் எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதும் உலகிற்குத் தெரிந்துவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவை அத்துமீறி பாகிஸ்தான் தாக்க முயன்றது. அதாவது பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவத்தின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாத பாகிஸ்தான், அத்துமீற முயன்றது. ஆனால், இந்திய பாதுகாப்புப் படைகள் அந்த தாக்குதல்களைத் துல்லியமாக முறியடித்தது. மறுபுறம் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை ஆரம்பித்தது. பல முக்கிய இடங்களைத் தாக்கியது. குறிப்பாகப் பாகிஸ்தான் ராணுவ தளமான ராவல்பிண்டி ராணுவ முகாமை கூட இந்தியா தாக்கியது. ஆனால், பாகிஸ்தானால் எதையும் தடுக்க முடியவில்லை.
பொய் தகவல்
இதனால் வேறு வழியே இல்லாமல் பாகிஸ்தான் சரணடைய இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. அதை இந்தியாவும் ஏற்கப் பாகிஸ்தான் தப்பியது. ஆனால், சொந்த மக்களிடம் தாங்கள் தான் போரில் வென்றோம் என்பது போலப் பாகிஸ்தான் பொய் தகவல்களைப் பரப்பி வந்தது. அந்நாட்டின் ராணுவ தளபதியான அசீம் முனீருக்கு பீல்ட் ஏர் மார்ஷல் பதவியும் தரப்பட்டது.
ஆப்கானிஸ்தான்
இப்படிப் பல விஷயங்களைச் செய்து, தனது சொந்த நாட்டு மக்களைப் பாகிஸ்தான் ஏமாற்ற முயன்றது. ஆனால், இப்போது ஆப்கானிஸ்தானுடன் வெடித்த மோதலில் பாகிஸ்தான் பலம் அம்பலப்பட்டுவிட்டது. பாகிஸ்தானில் உள்ள ஷெரீப் அரசுக்கு பாகிஸ்தான் தாலிபான் (சுருக்கமாக டிடிபி) தலைவலியாக மாறியுள்ளது. டிடிபி தீவிரவாதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஆப்கானிஸ்தானும் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமானது.
கடந்த சில நாட்களில் மட்டும் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 58 பாகிஸ்தான் ராணுவ படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 20 பாகிஸ்தான் செக்யூரிட்டி போஸ்ட்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிலைமை இந்தளவுக்கு மோசமானதால் பாகிஸ்தான் போர் நிறுத்தம் கோரியதாகவும் அதன்படி தாக்குதலை நிறுத்துவதாகவும் தாலிபான்கள் அறிவித்துள்ளன. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் பேண்ட்டை உருவி அதை வைத்து தாலிபான்கள் ஊர்வலமும் நடத்தியுள்ளன. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ரொம்ப பலவீனம்
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை எந்தளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.. தாலிபான்களைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் தவிக்கிறது. தாலிபான் மட்டுமின்றி பாகிஸ்தானில் பலூச் போராளிகளையும் கூட அழிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறுகிறது. இது அந்நாட்டின் ராணுவ பலத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
-
நடுவானில் மோதிய விமானம்! அலறி துடித்த இளம்பெண்! அடுத்த செகண்ட் அந்த அதிசயம்! திக்திக் வீடியோ -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications