கேகேஆர் அணிக்கு கட்டம் சரியில்லை.. தரமான இந்திய பவுலர் விலகல்.. கேமரூன் க்ரீனால் சமாளிக்க முடியுமா?
மும்பை: ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹர்சித் ராணா காயம் காரணமாக விலகியுள்ளதோடு, பதிரானா என்ஓசி பிரச்சனையால் சில போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது ஆகாஷ் தீப்பும் விலகி இருப்பது பின்னடைவாக அமைந்திருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்தடுத்து பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர். ஏற்கனவே சிஎஸ்கே அணியின் நேதன் எல்லீஸ், கேகேஆர் அணியின் ஹர்சித் ராணா, ஐதராபாத் அணியின் பேட் கம்மின்ஸ், ஆர்சிபி அணியின் ஹேசல்வுட், டெல்லி அணியின் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் முழுமையாகவும், பாதி போட்டிகளிலும் விலகி இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவுக்கு இன்னும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் என்ஓசி கொடுக்கவில்லை. அதேபோல் ராஜஸ்தான் அணிக்காக டிரேட் செய்யப்பட்ட சாம் கரணும் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் பல்வேறு அணிகளும் மாற்று வீரர்களை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேகேஆர் அணிக்கு அடுத்த இடியாக ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் மினி ஏலத்தில் ஆகாஷ் தீப்பை அடிப்படை தொகையான ரூ.1 கோடிக்கு கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்திருந்தது.
பெங்கால் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக ஆடி வந்தார் ஆகாஷ் தீப். ஆனால் இப்போது காயம் காரணமாக பெங்களூரில் உள்ள என்சிஏவில் ஆகாஷ் தீப் சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கேகேஆர் அணியின் பயிற்சி முகாமில் ஆகாஷ் தீப் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்சித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய இருவரும் விலகியுள்ள சூழலில், வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய 3 இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அந்த அணியில் இருக்கின்றனர். மற்றபடி பதிரானா வருவதற்கு தாமதம் ஏற்பட்டால், கேமரூன் க்ரீனை வைத்துதான் சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் கேகேஆர் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications