இதுதான்டா சஞ்சு சாம்சன்.. 3 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன வார்த்தை.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ருதுராஜ்!
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை பெங்களூர் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி மார்ச் 30ஆம் தேதி நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து ஆட உள்ளது. இம்முறை சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் இணைந்திருப்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் இணைந்தாலும், கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து செயல்படுகிறார். அதேபோல் இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இணை களமிறங்க உள்ளது தெரிய வந்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இருந்தாலும் ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் இடையில் ஈகோ பிரச்சனை எதுவும் உருவாகிவிடுமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் யூடியூப் பக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் அளித்துள்ள நேர்காணல் வெளியாகி இருக்கிறது. அதில் சஞ்சு சாம்சன் டிரேட் ஒப்பந்தம் தொடர்பாக ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருக்கிறார்.
அதில் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், 3 ஆண்டுகளுக்கு முன் சஞ்சு சாம்சனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது சஞ்சு சாம்சன் என்னிடம், தோனி எப்படி இருக்கிறார்? சிஎஸ்கே அணியின் சூழல் எப்படி இருக்கிறது? நீதான் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதும் அவரிடம் கேப்டன்சி பற்றி எல்லாம் எனக்கு கவலையே இல்லை.
ஆனால் சிஎஸ்கே அணியின் சூழலில் விளையாட விரும்புகிறேன். ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சன் என்னிடம், நான் சிஎஸ்கே அணிக்கு வந்து கேப்டனாக இருக்க கூடாது என்று நினைக்கிறேன். நான் உனக்கு கீழ் விளையாட விரும்புகிறேன். ஏனென்றால் சிஎஸ்கே என்பது உன்னுடைய அணி. நான் அங்கு ஒரு வீரராக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.
அதேபோல் சிஎஸ்கே அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக அந்த அணிக்கு வரவே விரும்புவேன். அதேபோல் இந்த சீசனில் எந்த பேட்டிங் ஆர்டரில் விளையாடுவேன் என்று முடிவு செய்யவில்லை. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் போதுமான அனுபவம் இல்லை என்ற உணர்வு இருந்தது. மற்றபடி சிஎஸ்கே அணிக்கு எது தேவையோ, அதனை செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications