இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்.. இதில் யார் வெளியே சென்றாலும் எதிர்பாராதது தான்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 8வது வாரத்தில் எலிமினேஷனுக்கான நாமினேஷன் தொடங்கி இருக்கிறது.
இதில் யாரும் எதிர்பார்க்காத ஐந்து போட்டியாளர்களின் பெயர்களை மீதமுள்ள போட்டியாளர்கள் நாமினேஷன் செய்திருக்கின்றனர்.

போட்டியாளர் பெயர் இல்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 8வது வாரத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த வாரத்தில் வெளியேற்றப்படும் போட்டியாளர்களுக்காக நாமினேஷன் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஆயிஷா மற்றும் ராம் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் வெளியே செல்பவர் யார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். ஏற்கனவே கடந்த வாரத்தில் ஜனனியின் பெர்பார்மன்ஸை அதிகமான நெட்டிசன்கள் அவரை அதிகமாக வெளியேற்றி விட வேண்டும் என்று ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். கடந்த வாரத்தில் ஜனனி அதிகமான வாக்குகள் பெற்றிருந்தார். இந்த நிலையில் ஜனனி ஏடிகே மீண்டும் நாமினேஷனில் வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இந்த வாரம் அவருடைய பெயரை போட்டியாளர்கள் அதிகமாக நாமினேஷன் செய்யப்படவில்லை.

நான்கு போட்டியாளர்களின் பெயர்
ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து நாமினேஷனில் வரும் அசீம் பெயரை ஷிவின், கதிரவன், மணிகண்டன் ஏடிகே போன்றோர் கூறுகின்றனர். அதோடு மைனா, விக்ரமன், அமுதவாணன் ஆகியோர் மணிகண்டனின் பெயரை நாமினேஷன் செய்கின்றனர். அதுபோல தனலட்சுமி, மணிகண்டன், ரச்சிதா ஆகியோர் விக்ரமன் பெயரை கூறுகின்றனர். அதுபோல ஏடிகே, அசீம், ஆகியோர் ரச்சிதா பெயரை கூறுகின்றனர் .இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் லிஸ்டில் மணிகண்டன், விக்ரமன், ரச்சிதா அசீம் என நான்கு போட்டியாளர்கள் பெயர்களை சக போட்டியாளர்கள் கூறி இருக்கின்றனர்.

இந்த வாரத்தில் யாராக இருக்கும்
கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஆயிஷா மற்றும் ராம் இதுவரைக்கும் இல்லாத வகையில் கடந்த வாரத்தில் நன்றாகவே அவர்களுடைய பர்பாமன்ஸை காட்டி இருந்தனர். அதிலும் குறிப்பாக ஆயிஷாவின் வெளியேற்றம் சரியானது அல்ல என்று இப்ப வரைக்கும் அவருக்கு ஆதரவாக ஹேஸ் டேக் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் மாட்டி இருக்கும் நான்கு போட்டியாளர்களும் டப் போட்டியாளர்களாக இருக்கும் நிலையில் அவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்பது ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள்.

கடைசியில் யாராக இருக்கும்
ரச்சிதா ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் வரும்போது அவருடைய கணவர் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவார். ஆனாலும் இதற்கு முன்பு ரச்சிதா நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த நேரத்தில் மூன்றாவது இடத்தில் தான் சேவ் ஆனார். இந்த நிலையில் இந்த வாரத்தில் எல்லாமே டப் போட்டியாளர்களாக இருக்கும் நிலையில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்பது பலருடைய கேள்வியாக இருந்தாலும் அதிகமானோர் மணிகண்டன் தான் வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்று இப்போதே கருத்து கூறி வருகிறார்கள். கடந்த வாரத்தில் தலைவர் பதவியில் இருந்தாலும் எந்த ஒரு முன்னேற்றமும் செய்யப்படாததால் அவருக்கு வாக்குகள் குறைவாக கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கடந்த வாரத்தில் அதிகமாக விக்ரமனுடன் கருத்து மோதலில் ஈடுபட்ட மணிகண்டனுக்கு ஆதரவாக ரசிகர்கள் இருக்கிறார்களா? அல்லது விக்ரமனை வெளியேற்ற காத்திருக்கிறார்களா? என்பது இந்த வார இறுதியில் தெரியவரும்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications