"ஒரு மாசம் ஆயிடுச்சி” ஆசைப்பட்டது கிடைத்துவிட்டது.. மகிழ்ச்சியை கணவரோடு கொண்டாடிய மகாலட்சுமி
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த விஜே மகாலட்சுமி தனது கணவரோடு இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிட்டு மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளராக அறிமுகமான விஜே மகாலட்சுமி தற்போது சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு முன்பே கணவன் கூறிய கண்டிஷன் இன்றோடு முடிந்து விட்டது என்று மகாலட்சுமி மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.

ரசிகர்களை கவர்ந்த சிரிப்பு
சீரியலில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் அனைத்து சேனல்களிலும் நடித்து, தான் நடிக்காத சேனலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்தான் விஜே மகாலட்சுமி. இவர் சீரியலில் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்பு தொகுப்பாளராக தான் களம் இறங்கி இருக்கிறார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்போது இவருடைய கியூட்டான சிரிப்பை பார்த்து இவருக்கு போன் செய்து பல ரசிகர்கள் வழிந்து வந்துள்ளனர் .ரசிகர்களின் கேள்விகளுக்கு கண்களை சுருக்கி இவர் சிரித்தபடியே பேசும் பதில்கள் மேலும் மேலும் ரசிகர்களை பேச தூண்டும் விதமாக இருந்து வரும்.

நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம்
தற்போது தொகுப்பாளராக இல்லாமல் சீரியல்களில் நடித்து வருகிறார். அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் மகாலட்சுமி வில்லி கேரக்டரில் அனைவரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவரை பார்த்த குடும்ப பெண்கள் பலர் இவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அதுவெல்லாம் தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று இவர் அதை சந்தோஷமாக வாங்கிக் கொள்கிறார். இந்த நிலையில் தான் சமூக வலைத்தளத்தில் இவர் ட்ரெண்டிங்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மிரட்டிய திருமணம்
ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து ஆன மகாலட்சுமி தற்போது எளிமையாக தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒன்றரை வருடங்களாக இவர்களுடைய காதல் வாழ்க்கை வெளி உலகத்திற்கே தெரியாமல் மறைந்து வந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணம் சமூக வலைத்தளத்தில் புரட்டி போடும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் இவர்களுடைய புகைப்படம் தான் அங்கே ஆக்கிரமித்து பலரையும் மிரட்டி கொண்டிருந்தது.

நள்ளிரவு பிரியாணி
இந்த நிலையில் மகாலட்சுமி தற்போது தன்னுடைய கணவரோடு நள்ளிரவில் பிரியாணி சாப்பிட்டு அந்த மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். இவருடைய திருமணத்திற்கு முன்பே ரவீந்தர் இவரிடம் கண்டிப்பாக முறையில் கண்டிஷன் போட்டிருந்தாராம். புரட்டாசி மாசம் நான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன், நாம் இப்போது திருமணம் செய்தால் நீயும் சாப்பிடக்கூடாது என்று கூறியிருந்தாராம். அதற்கு எல்லாம் சரி என்று கஷ்டப்பட்டு தான் ஒரு மாதத்தை மகாலட்சுமி ஓட்டி இருக்கிறார். இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிவடைந்ததும் தன்னுடைய கணவரோடு இவர் பிரியாணி சாப்பிட்டு, "புரட்டாசிக்கு பிறகு நள்ளிரவு பிரியாணி சிறந்த உணர்வு..நன்றி, அன்பு ரவீந்தர்.. நான் செய்யும் அனைத்து அநியாயங்களுக்கும் என்னுடன் இணைந்ததற்காக" என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோவும், கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications