கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
எங்க அய்யா சொல்ல நா தட்ட முடியாது. இந்த விவகாரத்த எப்பிடித் தீத்து வைக்கிறதுன்னு நீதாம் எனக்கு ஒரு வழி சொல்லனும் ன்னு கேட்டாம்.
பட்டுனு ஒரு ரோசனை தோணுச்சி. சொன்னா: தலையில தாழம்பூ வச்சி கொண்டை போட்டு முடிஞ்சீட்டு வர்ரேம். நீரு போயி உம்ம அத்தைகிட்டயும்,உங்க அய்யாகிட்டயும், பூசாரி மக இன்னைக்கு நம்ம வீட்டுக்கு தலையில தாழம்பூ வச்சிக்கிட்டு வருவா.
நீங்க அத்தை மக ஒவ்வொருத்தியையும் ஒரு அறைக்குள்ள இருக்கச் சொல்லுங்க. பூசாரி மக ஒவ்வொரு பொண்ணு கிட்டயும் போயி இருந்து பேசீட்டுவருவா. யாரோட அறையில அவ தலையிலயிருக்க பூ இதழ் உதுருதோ அவள கட்டிருக்கிடுதேம்ன்னு சொல்லுங்க ன்னு சொன்னா.
வம்புக்காச்சும் எதாவரு பொண்ணு இருக்கயிடத்துல உதுந்துட்டா?
அதெப்பிடி ; நாந்தாம் கீழே விழாம இறுக்கமா முடிஞ்சிடுவேனெ! அதோட, தாழ்ம்பூ மத்த மல்லிக, முல்லை, ரோச போல உதிராது. கவலையேபடாதீங்கன்னு அடிச்சிச் சொன்னா.
அட கூறுகெட்ட கூவெ, நானே போயி இப்பிடயெல்லாஞ் சொன்னா எம் பேர்ல சந்தேகம் வந்திராதான்னாம்.
அப்ப ஒண்ணு செய்யுங்க. கோயில் பூசாரிகிட்டப் போயி குறி கேப்போம்ன்னு சொல்லுங்க. உங்க அய்யாவும், அத்தையும் ஒடனே சரீன்னுடுவாங்க. நாஎன்னோட அப்பாகிட்டச் சொல்லி மத்த ஏற்பாடுகள கவனிச்ச்கிடுதேம். நம்ம சங்கதி அப்பாவுக்குத் தெரியும் ன்னா.
கோயில் பூசாரியத் தேடி அத்தையும், அய்யாவும் வந்தாங்க. மக சொல்லிக் கொடுத்தது மாதிரியே பூசாரியும் சொன்னார். அதுபடிக்கே ஆறு பொண்ணுகளையும்ஆறு அறைகள்ள இருக்க வெச்சாங்க.
கொண்டையில தாழ்ம்பூ முடிஞ்சிக்கிட்டு பூசாரி மக வந்தா. முதப்பொண்ணு இருக்கற அறைக்குள்ள பூசாரி மவ வந்தா. கூடவே பூசாரி, அத்தெ, அண்ணன்எல்லாரும் வந்தாங்க.
பிறகு ரெண்டாவது பொண்ணு. இப்பிடியே வரீசைய பூசாரி மக வந்தா. அவ கொண்டையிலயிருந்து ஒரு சின்னத் தூசி கூட கீழ விழல.
ஆறாவது அறைக்குள்ளயும் வந்தா பூசாரி மக.
அந்தக் கடேசி பொண்ணுக்கு உலையாக் கொதிக்கி. ஆகா ; நம்ம ஆறு பேருக்கும் கிடைக்காம நம்ம அம்மான் மகன், வெற எவளுக்கோல்லகிடைக்கப்போறாம் ; விடக் கூடாதே இதெ. எப்பிடியாவது தடுத்து நிறுத்தணுமே ; என்ன செய்யன்னு பதைச்சிக்கிட்டு இருக்கிறப்ப பூசாரிமக ஒரு கள்ளச்சிரிப்போட திரும்பிப்போகப் போறா. பளிச்சினு இவ அட்டளப் பலகையில இருந்த பன்னுருவாளை எடுத்த்தும் தெரியாது அறுத்ததும் தெரியாது சவரி முடியோடதாழம்பூவும் சேந்து தரையில விழுந்துட்டது!
பவிசோட கள்ள முடியில முடிஞ்சிருந்தது தெரிஞ்சிருச்சேன்னு, மெய்மறந்து - திகைச்சி - நிக்கவும் இவ பன்னுருவாளை மறைச்சி வச்சிட்டு பலமாச் சிரிச்சாகடைக்குட்டிப் பொண்ணு!
குனிஞ்ச தலை நிமுறாம பூசாரி மக வெளியேறிட்டா.
பிறகென்னஅம்மான் மகன, சூட்டிகையான ஒரு தந்திரத்துல ஜெயிச்சிக் கட்டிக்கிட்டா இந்தப் பொண்ணு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications