For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
ஜுலை 03, 2001

நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி! - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? (1)
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்.
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசையறு மதிகேட்டேன், இவை
அருள்வதில் உனக்கெதுந் தைடயுளதோ? (2)
(தொடரும்)
DVD
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!