For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அழுக்கான லண்டன்; போரடிக்கும் பிரசெல்ஸ்-புதிய சர்வே

By Staff
Google Oneindia Tamil News

London
லண்டன்: ஐரோப்பாவின் அழுக்கான தலைநகரம் என்ற அவப்பெயரை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக லண்டன் பெற்றுள்ளது. அதே போல் பொழுதுபோக்கு எதுவுமின்றி போரடிக்கும் தலைநகரமாக புரூசெல்ஸ் இருப்பதாக லேட்டஸ்ட் சர்வே ஒன்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் டிரிப்அட்வைஸ்சர் என்ற ஐரோப்பிய டிராவல்ஸ் நிறுவனம் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் முடித்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த 2,376 பயணிகளிடம் சர்வே ஒன்றை எடுத்தது.

அதில் ஐரோப்பாவின் அதிக விலைவாசி மிக்க தலைநகரம், அழுக்கான தலைநகரம், சுவையான தலைநகரம் எது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த சர்வேயின் முடிவை இந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி அழுக்கான நகரம் எது என்ற கேள்விக்கு லண்டன் என்று ஒட்டுமொத்தமாக பதில் வந்துள்ளதாம். இந்த கேள்விக்கு பதில் அளித்தவர்களில் 36 சதவீதம் பேர் லண்டன் ரெம்ப அழுக்கான நகரம், லண்டன் வாசிகளை போல் இவ்வளவு மோசமாக அழுக்கான ஆடை அணிபவர்களை தாங்கள் பார்த்தில்லை என கூறியுள்ளனர்.

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ். அதே சமயத்தில் ஐரோப்பாவில் அதிக விலைவாசி கொண்டதாகவும், இரவு தங்குவதற்கு அதிக வசதியான தலைநகரமாகவும் லண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பாவின் பூங்கா நகரமாக லண்டனை 50 சதவீதம் பேர் அங்கீகரித்துள்ளனர்.

ஐரோப்பாவின் சுத்தமான தலைநகரம் என்ற பெயரை டென்மார்க்கின் ஹோபன்கேஹன் தட்டி சென்றுள்ளது. பேரம் பேச ஏற்றதாக செக் குடியரசின் தலைநகரம் பிரெக்கும், நட்பான தலைநகரமாக அயர்லாந்தின் டப்ளினும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான சாப்பாட்டு வகை, நல்ல ஆடை அணிந்த நகரவாசிகளை கொண்ட தலைநகராக பாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அந்நகர மக்கள் பழகுவதற்கு எளிமையானவர்கள் அல்ல என தெரிகிறது.

மேலும் பொழுதுபோக்கு அம்சமில்லாமல் அதிகம் போரடிக்கும் நகரமாக பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அந்த சர்வே குறிப்பிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X