கம்பத்தில் இலவச மூலிகை பயிற்சி
கம்பம்: கம்பத்தில் டி.எஸ்.எம். ஹார்ட் பவுண்டேஷன் மாதம் ஒரு நாள் இலவச மூலிகை பயிற்சி நடத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பவுண்டேஷன் தலைமை நிர்வாகி கலையமுதன் கம்பத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கம்பத்தில் டி.எஸ்.எம். ஹார்ட் பவுண்டேஷன் மூலம், பொதுமக்களுக்கு மூலிகைகளின் முக்கியத்துவம், மருத்துவ குணங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட முயற்சி செய்து வருகின்றோம்.
அதன் முதல் கட்டமாக மாதம் ஒரு நாள் மூலிகைகள் பற்றிய இலவச பயிற்சி கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
சமையலறையில் மனித உடல்நலம், மூலிகை பயிற்சி, உணவாகும் தாவரங்கள், கீரைகளில் நன்மைகள் என பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்தப்படும்.
இலவச பயிற்சி முகாமில் அனைவரும் பங்கேற்கலாம். பயிற்சிக்கு கட்டணம் இல்லை. முன்பதிவு மட்டுமே உண்டு.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் டி.எஸ்.எம். ஹார்ட் பவுண்டேஷன், 15 ஏ, தியாகி வெங்கடாசலம் தெரு, கம்பம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.