For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிந்தனை செய் மனமே!

Google Oneindia Tamil News

அக்டோபர் 10ம் தேதி உலக மனநிலை மருத்துவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகில் 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மிதமாக 5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனநிலை பாதிப்பு ஏற்பட்டால் பேய், பிசாசு பிடித்து விட்டது என்று ஒதிக்கித் தள்ளும் நிலை இந்த விஞ்ஞான காலத்திலும் உள்ளது என்றால் மறுக்க முடியாது. ஒரு மனிதனுக்கு மனநிலை பாதிக்கக் காரணங்கள் யாவை என பார்ப்போமேயானால்:

குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடு மணமுறிவில் ஏற்படும் குழப்ப சூழ்நிலை வேலையில் எற்படும் பின்தங்கிய நிலை உடல் சுகாதாரத்தில் ஏற்படும் பின்னடைவு
குடிப்பழக்கம், போதைக்கு அடிமையாதல் பொருளாதாரத்தில் ஏற்படும் வீழ்ச்சி நட்பில் ஏற்படும் துரோகம்
ஆகியவைகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மனக் குழப்பத்தில் இருப்பவரை தக்க தருணத்தில் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லாவிட்டால் வீட்டாரால் புறக்கனிக்கப்பட்டு பராரியாக அழையும் பரிதாப நிலையினைக் காணலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் புகுந்த வீட்டில் கணவனே அவனது வீட்டார் நடத்தும் மாறுபட்ட நடத்தைகளால் மனம் புழுங்கி இருக்கும் அபலைப் பெண்ணை கிறுக்குப் பட்டம் கட்டி வீட்டுக்கு அனுப்பி விடுவதோ அல்லது ஏதாவது கோவில் அல்லது தர்காக்களில் போய் விட்டுவிட்டு ஒதுக்கித் தள்ளுவதோ தான் நடந்து கொண்டு இருக்கிறது.

எய்ட்ஸ், புற்றுநோய், காசநோய், புற்றுநோய் போன்றவைகளுக்கு உடனே வைத்தியம் பார்க்கிறோம், ஆனால் மனநோய் வந்தால் அதனை மூடி மறைப்பது தான் வேதனை.

அவர்களை பெற்றோர்கள் கூட ஒதுக்கும் பரிதாப நிலை. சாதாரண காய்ச்சலுக்கும்-சளிக்கும் டாக்டர்களை தேடி ஓடும் நாம் நெர்வெஸ் மாற்றத்தினால் ஏற்படும் நோய்களுக்கு டாக்டரை அணுக ஏன் கூச்சப் படவேண்டும்?.

ரு இளைஞருக்கு மனநிலை பாதித்திருந்தால் அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என்று அப்பாவி பெண்களை அவர்களிடம் பலியாக்கும் பரிதாப நிலையும் சமுதாயத்தில் உள்ளது.

ஒருநாள் என் வீட்டில் வேலை பார்ப்பவர் ஓடிவந்து, 'ஐயா கதவை எப்போதும் சாத்தி வையுங்கள். அருகில் உள்ள வீட்டில் ஒரு வாலிபர் மனநிலை பாதித்தவர் உள்ளார். அவர் திறந்த வீட்டில் நுழைந்து தகறாரு செய்கிறாராம்" என்றார்.

சிலர் தங்கள் பிள்ளைகள் மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வீட்டிலேயே வைத்து நோயினை முற்றச் செய்யும் நிலையையும் பார்க்கிறோம்.

சமீபத்தில் இதே போன்ற ஒரு செய்தி மகாராஸஷ்டிர மாநிலம் தானே நகரில் பிரான்ஸிஸ் கோம்ஸ் என்பவர் தன் மனைவி, மற்றும் மூன்று மகள்களை 7 ஆண்டுகளாக அடைத்து வைத்த சம்பவத்தினை பத்திரிக்கைகள் படம் பிடித்துக் காட்டின. இப்போது அவர்கள் மீட்கப்பட்டு தென் மும்பையில் ஜே.ஜே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் 85 சதவீத மனநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் இருக்கின்றனர் என்ற ஆய்வு சொல்கிறது. ஏனென்றால் மன நல மருத்துவ மனைகள் மாநில தலை நகரம், மாவட்ட தலை நகரங்களில் தான் உள்ளன.

போதிய அளவு மனநல மருத்துவர்களோ அல்லது மருத்துவமனைகளோ கிராமத்தில், நகர பஞ்சாயத்தில், ஏன் நகர சபைகளில் கூட கிடையாது. ஆகவே தான் அதற்கான விழிப்புணர்வினை நாம் ஏற்படுத்த முடியவில்லை.

மற்ற நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகள் ஏராளம். ஆனால் மனநோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறைவே. சென்னையில் கூட கீழ்ப்பாக்கத்தில் பெய்ன் ஸ்கூல் அருகில் இருக்கும் ஜோசப் ஆஸ்ப்பத்திரி போன்ற மருத்துவமனையும், போதையினால் ஏற்படுகின்ற மன நோய்களை போக்க அடையார் ரங்கனாதன் மருத்துவமனைகளும் தான் உள்ளன.

எனவே, சமுதாய சேவைகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் இதுபோன்ற மருத்துவமனைகளை நிறுவ பாடுபடலாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தனது ஊரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சென்னையில் இருக்கும் டாக்டர் பழனியப்பனிடம் அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதை சேவையாக செய்து கொண்டுள்ளார் என்பதினை நான் அறிவேன். தனி நபரே இதுபோன்ற பொது சேவையில் ஈடுபடும்போது ஒரு சமூகமாக நாமும், ஏன் ஈடுபடககூடாது?.

சிந்தனை செய் மனமே!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X