For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூந்தன்குளத்தில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி

Google Oneindia Tamil News

Silent Deepavali for the sake of Birds
நாங்குநேரி: நாங்குநேரி அருகேயுள்ள கூந்தன்குளத்தில் கிராம மக்கள் பசுமை தீபாவளியைக் கொண்டாடினர்.

இந்த விழாவில் கூந்தன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் மதுரம் பிரைட்டன் வரவேற்றார். காவல்துறை சிறப்பு அதிரடிப்படை தலைவர் மற்றும் காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு, கண்காணி்ப்பாளர் கருப்பசாமி, ஆகியோரின் அறிவுரையின் பேரில் கூடுதல் காவல் கணகாணிப்பாளர் திருநாவுக்கரசு, ஆய்வாளர் பாலசந்தர், மணிவண்ணன் மற்றும் காவலர்கள் கூந்தன்குளம் பறவை சரணாலயத்தில் அக்கிராம மக்களோடு தீப விளக்கேற்றி தீபாவளி கொண்டாடினர்.

பறவைகள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்கும் உறுதிமொழி எடுத்தனர். கூந்தன்குளம் கிராம மக்கள் தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்தால் பறவைகளுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதி பட்டாசுகளை வெடிப்பதில்லை.

தமிழ்நாடு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை பணியில் இயற்கையை பாதுகாப்பதிலும், வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களை கைது செய்வதை முக்கிய பணியாக கொண்டுள்ளது. எனவே பறவைகளை பாதுகாக்கும் கூந்தன்குளம் கிராம மககளோடு பசுமை தீபாவளியாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.

பறவை மனிதன் என புகழ் பெற்ற பால்பாண்டி, பறவைகளை பற்றிய பாடல் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவ்விழாவில் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காடன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X