For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கனடா அருங்காட்சியக விழாவில் இந்திய மகாராஜாக்கள் குறித்த கண்காட்சி

Google Oneindia Tamil News

Indian kings to 'hold court' in Canada
டோரன்டோ: கனடாவில் உள்ள பிரபலமான ஓன்டாரியோ ஆர்ட் காலரியில், இந்திய மகாராஜாக்கள் குறித்த சிறப்பு கண்காட்சி அரங்கு திறக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு கண்காட்சி நவம்பர் 20ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி வரை நடைபெறும்.

Maharaja: The Splendour of India's Royal Courts என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த விக்டோரியா அன்ட் ஆல்பர்ட் மியூசியம் இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மன்னர்கள் பயன்படுத்திய ஓவியங்கள், ஆயுதங்கள், ஆபரணங்கள், மணிமகுடம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம் பெறும்.

18வது நூற்றாண்டின் தொடக்கம் முதல் 1947ம் ஆண்டு வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியது வரையிலான கால கட்டத்தில் இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இது அமையும்.

இந்திய மன்னர்களின் சமூக, வரலாற்று பின்னணிகள், அவர்களின் பெருமைகள், சாதனைகள், அக்காலத்திய அரண்மனைகளின் சிறப்பு, பாரம்பரியம் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் இந்த கண்காட்சி அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X