For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம.பி. பென்ச் சரணாலயத்தில் 8 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் இருக்கும் பென்ச் புலிகள் சரணாலயத்தில் உள்ள 2 பெண் புலிகள் 2 மாத இடைவெளியில் 8 குட்டிகளை ஈன்றுள்ளன.

உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கை வெகுவாக்க குறைந்து வருகிறது. இதையடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புலிகளைக் காக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படு்த்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் பென்ச் புலிகள் சரணாலயத்தில் உள்ள 2 பெண் புலிகள் 8 குட்டிகள் ஈன்றுள்ளன.

இது குறித்து பென்ச் துணைத் தலைவர் ஓ.பி. திவாரி இன்று பிடிஐக்குத் தெரிவித்ததாவது,

கடந்த மாதம் ஒரு பெண் புலி தனது 5 குட்டிகளுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாதம் இன்னொரு பெண் புலி தனது 3 குட்டிகளுடன் இருப்பதை எங்கள் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த 2 பெண் புலிகளும் பென்ச் சரணாலயத்திற்குட்பட்ட கர்மஜ்ஹிரி தொடர் அருகில் தான் குட்டிகளை ஈன்றுள்ளன. கிழக்கு மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த சரணாலயம் சுமார் 411 சதுர கி மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

5 குட்டிகளை ஈன்ற பெண் புலி வேறு இடத்திற்குச் சென்றுவிட்டது. பெண் புலிகள் தான் குட்டிகளை ஈன்றவுடன் இடம்பெயர்வது வழக்கம். அந்த பெண் புலிக்கு 6 வயது இருக்கும் என்று அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X