For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஷேவ்' செய்வது எப்படி?

Google Oneindia Tamil News

Shaving
'சேவிங்' குறித்து நிறையவே தெரியும். ஆனால் 'ஷேவிங்' விஷயத்தில் பலரும் பல முக்கிய அம்சங்களை மறந்து விடுகிறோம்.

ஷேவ் செய்வதில் என்ன பெரிசா இருக்கு, ரேசரை எடுத்தோமா, ஷேவ் செய்தோமா என்று போக வேண்டியதுதானே என்று சிலர் கூறலாம். ஆனால் அதிலும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. கேளுங்க...

காலையில் எழுந்ததுமே ஷேவ் செய்ய உட்கார்ந்து விடக் கூடாது. நீங்கள்தான் எழுந்திருக்கிறீர்கள், உங்களது தோல் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்காது. இரவு முழுவதும் தூங்கியிருப்பதால் உங்களது கன்னம் சற்று உப்பியிருக்கும். அதற்குக் காரணம், உங்களது தோலின் அடிப்பகுதியில் தேங்கியுள்ள திரவம். அது குறையும் வரை காத்திருப்பது அவசியம். அப்போதுதான் உங்களால் சிறப்பாக ஷேவ் செய்ய முடியும்.

ஷேவ் செய்வதற்கு முன்பு பேஷியல் கிளன்சர் அல்லது ஸ்கரப்பை வைத்து லேசாக கன்னத்தை தேய்த்துக் கொடுத்துக் கொள்வது நல்லது. அப்படி செய்வதால் எல்லா முடிகளையும் எழுப்பி விடலாம். இதன் மூலம் அனைத்து முடியையும் முழுமையாக ஷேவ் செய்ய முடியும்.

ஷேவிங் செய்வதற்கு முன்பு இதமான சுடு நீரால் நமது முகத்தை அல்லது எங்கு ஷேவ் செய்கிறோமோ அந்த இடத்தில் தடவி ஈரமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் முடியின் கடினத்தன்மை குறைந்து, தோலை வெட்டிக் கொள்ளாமல் முடியை மட்டும் ஷேவ் செய்ய உதவியாக இருக்கும்.

ஷேவிங் கிரீமை முகத்தில் தடவும் போது அது நன்கு முடி முழுவதும் ஊடுறுவும்படி பூச வேண்டும். அப்போதுதான் ஷேவ் செய்யும் போது முடி முழுவதும் அகல வழி கிடைக்கும்.

எப்போதுமே கூரிய பிளேடையே பயன்படுத்துங்கள். இதன் மூலம் விரைவில் ஷேவ் செய்யலாம், அத்தோடு, தோல் முரட்டுத்தனம் அடைவதையும் குறைக்க முடியும். 'மொட்டை'யான பிளேடைப் பயன்படுத்தினால் பலமுறை 'வறட் வறட்' என்று இழுக்க நேரிடும். அது தோலுக்கு பாதிப்பைக் கொடுக்கும்.

எப்போதுமே முடியின் இயல்புக்கேற்பவே ஷேவ் செய்ய வேண்டும். எதிர்புறமாக செய்தால் அது முடியின் வேர்ப் பகுதியைப் பாதிக்கலாம். தோலில் புண்ணை ஏற்படுத்தி விடலாம், முரட்டுத்தனமானக தோல் மாறவும் வாய்ப்பு ஏற்படுத்தலாம். எனவே அதை தவிர்ப்பது நல்லது.

ஷேவிங்தானே என்று நினைக்காமல் அதை ஒரு கலையாக நினைத்து அழகாகச் செய்தால் முக அழகை மேலும் வசீகரமாக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X