For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபுதாபியில் ந‌டந்த கிரிக்கெட் போட்டியில் ஏ.டி.எஃப்.சி. அணி வெற்றி

By Siva
Google Oneindia Tamil News

Cricket match in Abu Dhabi
அபுதாபி: அபுதாபி மேலப்பாளையம் மெம்பெர்ஸ் கிளப் ந‌ட‌த்திய‌ 2வது ரமலான் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏ.டி.எஃப்.சி. அணி வெற்றி பெற்றது.

அபுதாபி மேலப்பாளையம் மெம்பெர்ஸ் கிளப் ந‌ட‌த்திய‌ 2வது ரமலான் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்ட‌ம் நேஷ‌ன‌ல் ட‌வ‌ர் ஸ்டேடிய‌த்தில் கடந்த 18ம் தேதி ந‌டைபெற்ற‌து.

இப்போட்டிக‌ளில் 6 அணிகள் பங்கேற்றன. ஏ பிரிவில் அபுதாபி ஸ்டார், பிரேவ்ஸ் ப‌ட்டாலிய‌ன், ஈடிஏ மெல்கோ ஆகிய 3 அணிக‌ளும், பி பிரிவில் பைட்ட‌ர்ஸ் 11, ஏ.டி.எஃப்.சி., எம்.எம்.சி.சி. ஆகிய் 3 அணிகளும் பங்கேற்றன.

க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ ந‌டைபெற்ற‌ போட்டிக‌ளில் ஏ பிரிவில் பிரேவ்ஸ் பட்டாலிய‌னும், பி பிரிவில் ஏ.டி.எஃப்.சி. ஆகிய‌ அணிக‌ள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இறுதிப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பிரேவ்ஸ் ப‌ட்டாலிய‌ன் முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 123 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அசிம் 62 (34 ), கேப்டன் செய்யது அலி 18 (15 ) ரன்கள் குவித்தனர். ஏ.டி.எஃப்.சி.யின் காசி 4 ஓவர்களுக்கு 25 ரன்கள் கொடுத்து 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். காலித் 3 ஓவர்களுக்கு 9 ரன்கள் கொடுத்து 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய ஏ.டி.எஃப்.சி. அணி 14 .5 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

அந்த அணியில் பாலா 45 (19 ), கங்கா 22 (20 ) ரன்கள் எடுத்தனர். மேலும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய பிரேவ்ஸ் பட்டாலியன் பேட்ஸ்மேன் ரில்வான் சிற‌ந்த‌ பேட்ஸ்மேன் விருதினை தட்டிச் சென்றார். அவர் மொத்தம் 148 ரன்கள் எடுத்தார் அவருக்கு எம்.எம்.சி.சி. அணியின் சார்பாக எம்.எம்.சி.சி. அணியின் வேக பந்து வீச்சாளர் அபு தாகிர் கோப்பையை வழங்கினார் மற்றும் ஈடிஏ மெல்கோ அணியின் கேப்டன் பரிசு வழங்கினார்.

ஏ.டி.எஃப்.சி. காலித் 14 விக்கட்டுகள் எடுத்தார், அவருக்கு எம்.எம்.சி.சி. அணியின் முன்னாள் துணை கேப்டன் ஞானியர் பரிசு கோப்பையை வழங்கினார் மற்றும் எம்.எம்.சி.சி. அணியின் ஆல் ர‌வுண்ட‌ர் முஹம்மத் இப்ராகிம் சைட் பரிசு தொகையை வழங்கினார். ர‌ன்ன‌ர் கோப்பையை ஜி. முஹ‌ம்ம‌து அச‌ன் ஸ்பான்ச‌ர் செய்தார். அவருக்கு பதிலாக எம்.எம்.சி.சி. அணியின் கேப்டன் சயீத் ர‌ன்ன‌ர் கோப்பை மற்றும் பரிசு தொகையையும் வழங்கினார்.

வெற்றிக் கோப்பையை ஸ்பான்ச‌ர் செய்த ஈடிஏ மெல்கோ மேலாள‌ர் முஹ‌ம்ம‌து உம‌ர் அன்சாரி ஏ.டி.எஃப்.சி. அணிக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையையும் வழங்கினார். மேலும் இந்த போட்டிக‌ளை சிறப்பாக நடத்தித் தந்த எம்.எம்.சி.சி. அணியின் நிர்வாகிக‌ள் பிஎஸ் காஜா மொஹிதீன், த‌ப்ரே ஆல‌ம் மற்றும் அந்த அணிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

English summary
2nd Ramalan cup cricket match was held in Abu dhabi. 6 teams participated out of which ADFC team emerged the winner. Braves battalion team's Rilwan has received the best batsman award.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X