துபாய் குழந்தைகள் மையத்தில் இந்திய குழு: சமூக மேம்பாடு குறித்து ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

Saathi Visits DECDC
துபாய்: துபாய் குழந்தைகள் நல மையத்திற்கு இந்திய சமூக நல மையக் குழு வருகை புரிந்து சமூக மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தியது.

துபாய் இந்திய சமூக நல மையம் மற்றும் துபாய் அரசின் சமூக வளர்ச்சித் துறையின் ஆதரவுடன் இந்திய சமூக நல மையத்தின் உறுப்பினர்கள் துபாய் அரசின் பதிவு பெறுவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இந்திய சமூக நல மையக் குழுவினர் சாத்தியுடன் ( Society for Advocacy and Awareness Towards Holistic Inclusion) இணைந்து குழந்தைகள் நல மையத்துக்கு விஜயம் செய்தனர்.

இந்திய கன்சல் ஜெனரல் மனைவியும், சாத்தியின் புரவலருமான சங்கீதா மேத்தா வர்மா தலைமையில், சாத்தி தலைவர் கே. குமார், துணைத்தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் மோகன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இக்குழுவினரை தலைமை அலுவலர் டாக்டர் உமர் அல் முத்தன்னா, இயக்குநர் டாக்டர் புஸ்ரா அல் முல்லா உள்ளிட்டோர் வரவேற்றனர். இருதரப்பினரும் சமூக மேம்பாடு குறித்தும் இப்பணிகளில் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+