For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் மிஸ்க் அமைப்பு நடத்திய இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத் மிஸ்க் அமைப்பின் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழச்சி கடந்த 2ம் தேதி குவைத்தில் நடந்தது.

குவைத் மிஸ்க்( MISK – Majlis Ihya'u Sunna Kuwait ) அமைப்பு இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து ஹிஜ்ரி 1433ம் வருட இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியினை கடந்த 2ம் தேதி மாலை நடத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் மௌலவி டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி தலைமை தாங்கினார். துவக்கமாக இர்ஃபான் ஜியாவுதீன் இறை வசனங்களை ஓதினார். உலமாப்பிரிவின் மௌலவி முஹம்மது ஷரீப் மன்பஈ வரவேற்புரை நிகழ்த்தினார். துணை தலைவர் அப்துல் பாரி ஹஜ்ரத் துவக்கவுரை நிகழ்த்தினார்.

இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் முக்தார் மஃரூப் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

டாக்டர் சபியுல்லா நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை முனீர் அஹமது தொகுத்து வழங்கினார்.

English summary
MISK – Majlis Ihya'u Sunna Kuwait in cooperation with Ministry of Awqaf & Islamic Affairs and Grand Mosque Administration organized a spectacular program for the special lectures on the eve of New Hijra Year 1433 which was held on december 2 at Grand Mosque Auditorium at 7:15 p.m.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X