For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயூரம் காவிரியில் கடைமுழுக்கு– நாகை மாவட்டத்தில் விடுமுறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான இன்று மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்த விழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காவிரியில் நீராடி மயூரநாதரை தரிசனம் செய்தனர். கடைமுக தீர்த்தவாரியை ஒட்டி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதத்தில்… காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்வதாக துலா புராணம் தெரிவிக்கின்றது. ஐப்பசி மாதக் கடைசி நாளில், காவிரியில் நீராடுவதற்கு 'கடை முழுக்கு" என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர்!. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் நீராடுகின்றனர்.

கங்கை பூமிக்கு வந்தாள்

வான் நதியாம் கங்கையை பூமிக்கு அழைத்தான் பகீரதன். “எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு, எல்லோரும் அதனை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள், எனவே நான் வரமாட்டேன்" என்று தயங்கி மறுத்தாள் கங்காதேவி.

உடனே பகீரதன், “பாவம் செய்பவர்களை ஏன் சிந்திக்கிறாய்? எத்தனையோ மகான்கள் நீராடுவார்களே…" என்று சொல்ல, பூமிக்கு வர சந்தோஷத்துடன் சம்மதித்தாளாம் கங்காதேவி! அதன்படியே வடக்கே குடிகொண்டாள். வடக்கில் வசிக்கும் கங்கா தேவி, தென்னக மக்களும் பயன் பெறும் வகையில் வகையில், ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் வாசம் செய்கிறாள் என்கிறது துலா புராணக் கதை. எனவேதான் ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராட அறிவுறுத்துகின்றனர் முன்னோர். பிறநாட்களை விட கடைசி நாளன்று துலா கட்டத்தில் நீராடுவது சிறப்பு.

முடவன் முழுக்கு

பக்கத்து ஊர்க்காரர் ஒருவர், கால் ஊனமுற்றவர். அவருக்கு கடை முழுக்கு நாளன்று காவிரியில் நீராட ஆவல். எனவே மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தார். ஆனால் கடைமுழுக்கின் மறுநாள்தான் அவரால் துலா கட்டத்துக்கு வந்து சேர முடிந்தது. இதையறிந்த கங்காதேவி, அந்த நாளிலும் காவிரியில் இருந்தாள். இதனால், கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல் நாள்) 'முடவன் முழுக்கு" என்கின்றனர் முன்னோர்கள். எனவே கடை முழுக்கன்று மயிலாடுதுறை செல்ல இயலாதவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி சென்று நீராடலாம். அன்றைய தினமும் மக்களுக்காக கங்கை காத்திருப்பாள் என்கின்றன புராணங்கள்.

உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறை கடைமுக தீர்த்த விழாவையொட்டி, நாகை மாவட்டத்துக்கு 16-ம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயில் சார்பில், 16-ம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்படும் கடைமுக தீர்த்த விழாவை ஒட்டி , நாகை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு நவ. 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The famous festival “Kadaimugam” or “Kadaimuzhukku” is celebrated in Mayavaram at the banks of river Cauvery in the Tamil month of “Ayppassi”. Local holiday has been declared for Nagai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X