For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய மீலாது பெருவிழா

By Siva
Google Oneindia Tamil News

அபுதாபி: அபுதாபி அய்மான் ச‌ங்க‌த்தின் சார்பில் அண்ண‌ல் எம்பெருமானார்(ஸ‌ல்ல‌ல்லாஹு அலைஹி வ‌ஸ‌ல்ல‌ம்) அவ‌ர்க‌ள‌து உத‌ய‌ தின‌ நிக‌ழ்ச்சி கடந்த 9ம் தேதி அபுதாபி இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ர் அர‌ங்க‌ில் ந‌டைபெற‌்றது.

நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்து நிக‌ழ்ச்சிக‌ளை நெறிப் ப‌டுத்தினார். துவ‌க்க‌மாக‌ ஹாபிழ் எஃப். ஷாஹுல் ஹமீத் இறைமறை வசன‌ங்கள் ஓதினார். தொட‌ர்ந்து பொதுச் செயலாளர் காய‌ல் எஸ்.ஏ.சி.ஹமீத் வரவேற்புரையாற்றினார். அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியின் செயலாளர் எஸ். சைய்யத் ஜாபர் கல்லூரியின் நடப்பாண்டின் செயல் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

அய்மான் மகளிர் கல்லூரி தலைவர் க‌னிமொழிக் க‌விஞ‌ர் களமருதூர் ஜே.ஷம்சுத்தீன் ஹாஜியார், சமுதாயப் புரவலர் நோபல் மரைன் ஹாஜி ஷாஹுல் ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

”உண்ர்வாய் உன்னை” நிகழ்ச்சி நடத்துனர் சகோ. தஞ்சை எஸ்.ஜலாலுத்தீன், அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் ஹாபிழ் ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி, சென்னைப் பல்கலைக்கழத்தின் பேராசிரியர் முனைவர் ஹாபிழ் அன்வர் பாதுஷா அல்வி ஆகியோர் பெருமானாரின் வாழ்வியல் வரலாற்றை ஆதாரப்பூர்வமான முறையில் விவரித்து சமுதாயம் நாய‌க‌த்தின் வழி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தின‌ர்.

நிகழ்ச்சியில் அய்மான் நிர்வாகிக‌ள், கல்லூரியின் பொருளாளர் சஹாபுத்தீன், பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீத் மரைக்காயர், முதுவை ஹிதாயத், துபை ஈமான் ச‌ங்க‌ம், அமீரக காயிதே மில்லத் பேரவை, இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ர் ம‌ற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், ஊர் ஜமாஅத்துகளின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அய்மான் சங்க செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

முன்னதாக அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் புதிதாக‌ இணைக்க‌ப்பட்ட உறுப்பினர்களின் படிவத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயிலிட‌ம் பேரவை தலைவர் குற்றாலம் ஏ.லியாகத் அலி, பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா, பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான், அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத், மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் அஹமத் குத்புத்தீன் ராஜா ஆகியோர் வழங்கினர்.

நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற சிறப்பு பேச்சாள‌ர்க‌ள் அனைவருக்கும் அய்மான் சங்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தீனிசைப் பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடல்கள் பாடினார். நிறைவாக‌ மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்ற‌து.

அய்மான் சங்க செயலாளர்கள் எரவாஞ்சேரி முஹம்மது இக்பால், திருவாடுதுறை அன்சாரி பாஷா, களமருதூர் ஷர்புத்தீன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

English summary
Abu Dhabi Aiman Sangam celebrated Milad un-Nabi on february 9 at Indian Islamic center in Abu Dhabi. 3 scholars gave speech about the life of Prophet Mohammad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X