For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

20ம் தேதி தொடங்குகிறது அழகர் கோவில் சித்திரை திருவிழா-மே 6ல் ஆற்றில் இறங்குகிறார்

Google Oneindia Tamil News

மதுரை : அழகர்கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 20 ம் தேதி முகூர்த்தக் காலுடன் தொடங்குகிறது. மே 6ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

அழகர்கோவில் திருவிழாவை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்காடசலபதி கோவிலில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி ஏப்ரல் 20 ம் தேதி நடைபெறுகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு மே 2 ம் தேதி அழகர்மலை கள்ளழகர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் முதல் நாள் நிகழ்ச்சி துவங்குகிறது. மே 4 ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு அழகர் மலையில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார்.

பின்பு, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல், வழியாக மதுரை வருகிறார். 5 ம் தேதி காலை மூன்றுமாவடியில் சுவாமிக்கு பக்தர்கள் வரவேற்பு அளிக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கோ.புதூர், சர்வேயர் காலனி வழியாக பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளுளி, பிரசன்னவெங்கடாஜலபதி கோவிலுக்கு வருகிறார். அங்கு திருமஞ்சணமாகி தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அங்கு விடியவிடிய அழகருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. இதனையடுத்து, மே 6 ம் தேதி காலை தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் அழகர் இறங்குகிறார்.

அழகர் கோவில் திருவிழாவை முன்னிட்டு இப்போது முதலே மதுரை களைகட்டி வருகின்றது.

English summary
Azhagar Kovil chithirai festival is beginning on April 20. Kallazhagar will enter into the river Vaigai on May 6.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X