For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒஹாயோவில் கொலவெறி பாடல் நடனத்துடன் தமிழர் திருவிழா!

By Shankar
Google Oneindia Tamil News

டேட்டன் : ஒஹாயோ மாகாணத்தில் ரைட்ஸ் சகோதரர்கள் பிறந்து, சைக்கிள் கடை வைத்து பின்னர் விமானத்தை கண்டுபிடிக்குவரை வாழ்ந்த டேட்டன் நகரில் தமிழர்கள் பெருவாரியாக வசித்து வருகின்றனர்.

இங்கு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட டேட்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பிப்ரவரி 11 ம் தேதி சனிக்கிழமை தமிழர் திருவிழா நடைபெற்றது.

இருநூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டார்கள். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மட்டுமே பங்கேற்க செய்து முழு நீள பொழுது போக்கு அம்சங்களுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் ராஜ் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்ச்சங்கம் உருவான கதையை விரிவாக எடுத்துரைத்து, சங்கத்தை மென்மேலும் வளர்ச்சியடையச்செய்ய வேண்டியதன் அவசியத்தையும், அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு தமிழ்ச்சங்கம் எவ்வளவு உறுதுணையாக இருக்கும் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

வயலின் இசை, பரதநாட்டியம், பாரதியார் கவிதைகள், பாரதியார் கவிதைகள, தமிழ்ப்பேச்சு, கோலாட்டம், திரையிசை நடனம் என முத்தமிழும் கலந்து மாணவ மாணவியர்கள் நிகழ்ச்சிகளை அமைத்திருந்தனர்.

தொழில்முறை நடனக் கலைஞர்களே திணறக்கூடிய பல திரையிசைப் பாடல்களை உள்ளடக்கிய ‘மெட்லி’ க்கு கேத்தரினும் ஷிவானியும் போட்ட ஆட்டத்தை பார்த்து பார்வையாளர்களும் ஆடத்தொடங்கி விட்டனர். உச்சக்கட்ட ஆட்டமாக குழுவினர் அனைவரும் 'வொய் திஸ் கொலவெறி' பாடலுக்கு நடனமாடினர்.

பெரியவர்களுக்காக ஒரு வார்த்தை ஒரு சொல் தமிழ் சொற்கள் போட்டி நடைபெற்றது.

தமிழ்ச் சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து செல்வம் பேசினார். டேட்டனில் தமிழ் மாணவ மாணவியர்களுக்காக தமிழ்ப்பள்ளி துவக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி முதல் , மயாமிஸ்பர்க், எண் 2700 Lyons Road Administrative Government Center ல் தமிழ்ப்பள்ளி வகுப்புகள், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசளிப்பும், சீட்டுக் குலுக்கல் முறையில் பார்வையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மீனாள் நன்றி கூற, இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதம் பாடியவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இரவு உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. நிகழ்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ராஜ், செல்வம், அனந்தபத்மநாபன், மீனாள், அனந்தகுமார், ஜெயந்தி, மஞ்சு, சுமா, பழனி, மஞ்சுளா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

புகைப்படங்கள் : விஜய்

English summary
Tamils Festival was celebrated in style by Dayton Tamil Society at Ohio, US. Lot of Tamil Children participated in the festival and showed their skills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X