துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் கல்விச் சுற்றுலா
துபாயில் இருந்து அபுதாபி செல்லும் வழியில் அமைந்துள்ள சஹாமா எமிரேட்ஸ் ஷு பார்க்கிற்கு 2 பேருந்துகளில் உறுப்பினர்களை தங்களது குடும்பத்தினருடன் அழைத்துச் செல்லப்பட்டனர். காலை 8 மணிக்கு துபாயில் இருந்து பேருந்து புறப்பட்டது. இடையில் சுவையான காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொதுவாக சாப்பிட்டவுடன் குப்பைகளை கண்ட இடத்தில் வீசி செல்பவர்களுக்கு மத்தியில் ரமணியின் ஏற்பாட்டில் அனைத்து குப்பைகளும் சேகரிக்கப்பட்டு அதற்கென வைக்கப்பட்ட இடத்தில் சேர்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுமார் 10.30 மணிக்கு பேருந்து சஹாமா எமிரேட்ஸ் ஷு பார்க்கினை அடைந்தது. அங்கு வந்திருந்த 110 பேரும் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அந்த பார்க்கில் பல்வேறு வகையான ஆடுகள், சிங்கம், புலி, குரங்கு, வரிக்குதிரை உள்ளிட்ட விலங்குகள், மயில் உள்ளிட்ட பறவைகள், பல்வேறு மீன் இனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஷு பார்க்கில் பெரியவர்களும் சிறுவர்களாக மாறி குதூகலமடைந்தனர். தங்களது இளமைக்கால வாழ்விற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கருதினர். பார்க்கில் உள்ள ஊழியர் பாம்பினை ஒவ்வொருவரது கழுத்திலும் வைத்துக் காட்டினார். சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் தங்களது கழுத்தில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஒவ்வொரு விலங்கினம் குறித்தும் அதன் வாழ்க்கை முறை உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் தமிழ்த்துளி அமைப்பின் தலைவி ப்ரியா விஜய் விவரித்தார். சுமார் மூன்று மணி நேரம் எமிரேட்ஸ் ஷு பார்க்கினை கண்டுகளித்த மகிழ்ச்சியில் அருகிலுள்ள பூங்காவிற்கு மதிய உணவிற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். மதிய உணவிற்குப் பின்னர் சிறிது ஓய்விற்குப் பிறகு குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்து துபாய் திரும்பியது.
பேருந்து பயணத்தின் போது விடுகதை, சிறுகதை, மோனோ ஆக்டிங், பாட்டுக்குப் பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெரியவர்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தேர்வின் காரணமாக கலைப்புற்றிருந்த குழந்தைகளுக்கு இந்த சுற்றுலா ஒரு புத்துணர்வை அளித்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
ரமணி, மாயா, தமிழ்ச்செல்வன், பாலாஜி, விஜய், பாவை நியாஸ் உள்ளிட்ட குழுவினர் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications