For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செட்டிநாடு காலிப்ளவர் பருப்பு சூப்

Google Oneindia Tamil News

Chettinad Kaliflower dhal soup
தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - அரை கப்
காலிப்ளவர் - ஒரு கை அளவு
பெரிய வெங்காயம் - 1( நீளமாக நறுக்கியது)
தக்காளி - 2 (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி - பொடியாக அரிந்தது - ஒரு கை
உப்பு

தாளிக்க:

நெய் - 3 ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் - தலா 1
சோம்பு - அரை ஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:

பருப்பை கழுவி 10 நிமிடம் நீரில் ஊற போடவும். சூப் திக்கா இருக்க கூடாது என்பதால் பருப்பை குறைவாகச் சேர்க்கவும். பிரஷர் குக்கர்-ரில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை போடவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். ஊற வைத்த பருப்பில் இருந்து தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு தக்காளியுடன் சேர்த்து வதக்கவும். கழுவிய காலிப்ளவர், மஞ்சள் தூள்,3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை சமைக்கவும்.

விசில் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் (சூப் தண்ணியா இருந்தா தான் டேஸ்ட்-டா இருக்கும்) சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

English summary
This delicious and comforting Kaliflower dhal soup tastes like it took hours to make, yet is ready to eat in just 20 minutes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X