For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

22ம் தேதி குவைத்தில் மக்கள் பேச்சரங்கம்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் 'உங்கள் பேச்சு... மவுனத்தை விட அழகானது' என்னும் நிகழ்ச்சி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

குவைத் நாட்டின் 52வது தேசிய மற்றும் 22வது விடுதலை தினங்களை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-Tic), 8ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு தொடர் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து "உங்கள் பேச்சு... மவுனத்தை விட அழகானது!" என்ற கருப்பொருளில் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை எடுத்துரைக்கும் "மக்கள் பேச்சரங்கம்" என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி வரும் 22ம் தேதி இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:30 மணி வரை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் நடைபெறும்.

பேச்சரங்க விவரம் வருமாறு,

தலைப்பு: மாமறை வழங்கிய மாநபி (ஸல்)...! என் பார்வையில்...!!

பங்கேற்போர்: குவைத் வாழ் தமிழ் மக்கள்

பேச்சரங்க விதிமுறைகள்:

குவைத் வாழ் தமிழ் மொழி பேசும் சமயம், மதம் மற்றும் அமைப்பு வேறுபாடின்றி ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

வயது வரம்பு கிடையாது.

பெயர் மற்றும் உள் தலைப்பு போன்றவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே உரையாற்ற அனுமதி வழங்கப்படும்.

5 முதல் 8 நிமிடங்கள் வரை உரையாற்றலாம்.

சிறப்பாக உரையாற்றும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

முன்பதிவு செய்யுமிடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்.

முன்பதிவு செய்ய கடைசி நாள் : 22.02.2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆ வரை

குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

English summary
K-Tic has arranged for a 'Makkal Pecharangam' on february 22 in Kuwait. All are invited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X