For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது துபாயா, இந்தியாவா?: வியக்க வைத்த நிரித்யசமர்ப்பண் 2013

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் பிரசித்தம் குரூப்பின் சார்பின் நிரித்யசமர்ப்பண் 2013 எனும் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி 07.06.2013 அன்று மாலை துபாய் இந்தியப் பள்ளி ஷேக் ராஷித் கலையரங்கில் நடைபெற்றது.

துவக்கமாக இந்திய கன்சல் அசோக் பாபுவின் தாயார் லலிதா, சீதாலட்சுமி, கவிதா பிரசன்னா, சந்திரா கீதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றினர். அதனைத் தொடர்ந்து அமீரக தேசிய கீதம், இந்திய தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

நிரித்யசமர்ப்பண் குறித்த அறிமுகவுரையினை பெட்டினா ஜேம்ஸ் நிகழ்த்தினார். காவ்யா விஜயேந்திரன் குரு கவிதா பிரசன்னா குறித்த உரையினை வழங்கினார். பிரசன்னா வரவேற்புரை நிகழ்த்தினார்.

கவிதா பிரசன்னா வரவேற்பு நடனத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ண லீலை, தக்‌ஷ யாகம், ருத்ர தாண்டவம், சிவ பார்வதி திருமணம் உள்ளிட்டவற்றை விளக்கும் வண்ணம் நடன நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.

சிறப்பு விருந்தினர்களாக இந்திய கன்சல் எம்.பி. சிங், அசோக் பாபு, அவரின் தாயார் லலிதா, துபாய் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கன்சல் எம்.பி. சிங் தனது உரையில், கவிதா பிரசன்னாவின் மாணக்கர்கள் பங்கேற்று வரும் நிரித்யசமர்ப்பண் எனும் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சியில் கடந்த 4 வருடங்களாக தான் பங்கேற்று வருவதாகவும், வருடத்திற்கு வருடம் இதன் நிகழ்வுகள் மெருகேறி வருவதாகவும் குறிப்பிட்டார். ஐ பேட் ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்து தற்பொழுது சந்தையில் மிகவும் புதிய அம்சங்களுடன் கிடைத்து வருவது போல் நிரித்யசமர்ப்பண் நிகழ்வும் அமைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கன்சல் அசோக் பாபு தனது உரையில், துபாயில் நடைபெறும் நிகழ்வுகளில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களின் ஆக்ரமிப்புகள் தான் அதிகமாக இருக்கும். ஆனால் வருங்கால நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிரித்யசமர்ப்பண் நிகழ்வில் தான் பங்கேற்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார். நிகழ்வில் தனது தாயார் லலிதாவுடன் பங்கேற்பது மகிழ்வளிக்கிறது எனக் குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஈடிஏ அஸ்கான் நிர்வாக இயக்குநர் செய்யது எம் ஸலாஹுதீன் சார்பில் அலுவலக மேலாளர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் நினைவுப் பரிசினை ஏ. லியாக்கத் அலியிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

மேலும் குச்சிப்புடி, தீபாஞ்சலி, பதம், வர்ணம், தில்லானா, தமிழ்நாடு, கேரளா, குஜராத், மராட்டியம், பஞ்சாப், ஆந்திரா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலத்தவரின் நடன நிகழ்வுகளை நினைவு கூறும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நடன நிகழ்வுகளில் பங்கேற்றுச் சிறப்பித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளை ஏ. லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் ஜெகநாதன், சந்திரா கீதாகிருஷ்ணன், சிதாலட்சுமி உள்ளிட்டோர் வழங்கினர். கார்த்தி, பிரியா, சலாஹுத்தீன், தமீம் அன்சாரி உள்ளிட்ட நிகழ்விற்கு பெரும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவன புரவலர் ஏ. முஹம்மது தாஹா, பிரசன்னா, விஜயராகவன், விஜயேந்திரன், பாலா உள்ளிட்ட குழுவினர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.

நிரித்யசமர்ப்பண் 2013 எனும் இச்சிறப்பு நிகழ்விற்கு பிவிஇ கிரேன்ஸ் மிடில் ஈஸ்ட், அல் நபூதா இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ், என்.எம்.சி. ஹெல்த்கேர், கிளாஸ் மெடிக்கல் சென்டர், அல் கரவான் கேரேஜ், பிளாக் துலிப் பிளவர்ஸ், ஏ.எஸ். லைட்டிங் சப்ளைஸ், ஜிஜி எமிரேட்ஸ், பெருமாள் பூக்கடை, சிவ ஸ்டார் பவன் உள்ளிட்டவை அணுசரனை வழங்கியுள்ளன.

ஒன் இந்தியா தட்ஸ் தமிழ்.காம், தினமலர் நாளிதழ், முதுகுளத்தூர்.காம் ஆகியவை ஊடக அணுசரனை வழங்கியுள்ளன.

நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...

படம் 1

படம் 1

படம் 2

படம் 2

படம் 3

படம் 3

படம் 4

படம் 4

படம் 5

படம் 5

படம் 6

படம் 6

படம் 7

படம் 7

படம் 8

படம் 8

படம் 9

படம் 9

படம் 10

படம் 10

படம் 11

படம் 11

படம் 12

படம் 12

படம் 13

படம் 13

படம் 14

படம் 14

English summary
Nritya Samarpan 2013, a classical dance event was held in Dubai on june 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X