ஏப்ரல் 12ல் துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் 2வது ஆண்டு விழா: குட்டீஸ் ஸ்பெஷல்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி துபாய் அல் தவார் ஸ்டார் சர்வதேச பள்ளியில் மாலை 6 மணி முதல் நடைபெற இருப்பதாக அமைப்பின் நிறுவன தலைவி பிரியா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க குழந்தைகளால் குழந்தைகளுக்காக நடத்தப்பட இருக்கின்றது. தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக "சொல்லரசி" தேச மங்கையர்க்கரசி சிறப்பு சொற்பொழிவாற்ற இருக்கின்றார்.
மேலும் விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் குழந்தைகளின் பெயர்களை 050-7472432 மற்றும் 055-5571985 ஆகிய எண்களில் விரைந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்த்துளி அமைப்பு தமிழ் குழந்தைகள் தாய்மொழியில் பேச வேண்டும் எனும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications