தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் நாளை ரியாத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil
ரியாத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் நாளை ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.
நாளை காலை 9மணிக்கு துவங்கும் இந்த ரத்ததானமுகாம் மாலை 4 மணிவரை நடைபெறுவதாகவும் குருதிக் கொடையாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்வதற்காக வாகன ஏற்பாடுகளும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல தலைவர் அப்துர் ரஹ்மான் நவ்லக் தெரிவித்துள்ளார்.

இது நஸீம் கிளை சார்பாக நடைபெறும் ரியாத் மண்டலத்தின் 26வது இரத்ததான முகாமாகும்.
இரத்ததானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் : முஹம்மது ஷாகிர் - 0507946557, அஷ்ரஃப் - 0558837810, 011 4021854


Click it and Unblock the Notifications
