For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலோடு காதல் செய்வீர்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காதலர் தினம்... காதலிப்பவர்கள் எல்லோருக்குமான பொதுவான தினம். உலகக்காதலர்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு உற்சாக நாளாய் மாறிவிட்டது பிப்ரவரி 14.

தீயாய் நகரும் நொடிப்பொழுதுகள்... வேலைப்பளுவிற்கு இடையே ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசக்கூட சில நிமிடங்கள் கிடைப்பதில்லை. தாம்பத்ய வாழ்வில் சின்னச்சின்ன ரொமான்ஸ்கள்... சில நிமிட முத்தங்கள் என தினசரி வாழ்வில் நகர்ந்து போனாலும் காதலர் தினத்தன்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் உங்களவருடன் செலவழியுங்கள்...

வர்த்தக ரீதியான கொண்டாட்டங்களை ஒதுக்கிவிட்டு பார்த்தோமானால் வாழ்க்கைத் துணையோடு காதலை பரிமாறிக்கொள்ள எளிமையான, செலவில்லாத சில விசயங்கள் இருக்கின்றன. காதலர் தினத்தை காதலோடு செலவழிக்க நிபுணர்கள் கூறும் சில யோசனைகளை பின்பற்றுங்களேன்...

அவருக்கு என்ன பிடிக்கும்?

அவருக்கு என்ன பிடிக்கும்?

பண்டிகை தினங்களில்தான் பலகாரம் சமைக்க வேண்டும் என்றில்லை. காதலர் தினமும் இன்றைக்கு உலகப் பண்டிகை தினங்களில் ஒன்றாக இணைந்து விட்டது. புத்தாடை, பரிசு என களைகட்டினாலும் வீட்டில் அவருக்காக பார்த்த பார்த்து சமைத்த உணவை சர்ப்ரைஸ் ஆக தட்டில் பரிமாறும் போது அவரின் கண்களில் நீங்கள் காதலை உணர்வீர்கள்.

காதலோடு ஒரு முத்தம்...

காதலோடு ஒரு முத்தம்...

கடைக்குப் போய் விலை உயர்ந்த பரிசு வாங்கி வந்து அதை மறைத்து வைத்து கொடுத்தால்தான் மனைவிக்கு காதல் அதிகரிக்கும் என்றில்லை... ஆசையோடு... அதீத காதலோடு கொடுக்கும் ஆழமான முத்தமே பலகோடி ரூபாய்க்கு சமமானது.

காதல் மெசேஜ்கள்...

காதல் மெசேஜ்கள்...

காதலை வெளிப்படுத்த இன்றைக்கு பல வழிகள் வந்துவிட்டன. நீங்கள் அனுப்பும் காதல் எஸ்.எம்.எஸ்களால் உங்கள் துணையின் இன்பாக்ஸ் நிரம்பி வழியட்டும்... இமெயில் மூலம் அனுப்பும் காதல் கடிதங்களினால் ஒவ்வொரு நொடியும் உங்களின் காதலை உணர்த்துங்கள்.

நிறைய செலவழியுங்கள்...

நிறைய செலவழியுங்கள்...

தாம்பத்யத்தில் பணம் செலவழித்து பரிசளித்தால்தான் காதல் அதிகரிக்கும் என்றில்லை... உங்கள் துணையோடு நீங்கள் கைகோர்த்து அமர்ந்திருக்கும் சில மணிநேரங்கள்தான் மிக அதிக மதிப்பு மிக்கது. பேச வேண்டும் என்று நினைத்து நினைத்து வேலைப்பளுவினால் மறந்து உறங்கிப் போனாலும் காதலர் தினத்தன்று மட்டுமாவது, வேலைகளை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு துணையோடு அதிகநேரம் செலவழியுங்கள்... அவரோடு காதல் நினைவுகளை அசைபோடுங்கள்...அதுவே மறக்க முடியாத காதலர் தினமாக மாறிவிடும்.

English summary
Though Valentine’s Day is traditionally viewed as a woman’s holiday, your husband might just be the rare man who appreciates some good old-fashioned romance. Ignore the nay-sayers who claim that all men hate February 14th and make this a night that is just about celebrating the two of you. You can keep it low-key and still be romantic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X