துபாயில் மிஹ்ராஜ் இரவு சிறப்பு தொழுகை
துபாய்: துபாயில் மிஹ்ராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நபிகள் நாயகம் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டு இறைவனை தரிசித்து, முஸ்லிம்களின் தலையாய கடமையான தொழுகையைப் பெற்று வந்த நிகழ்ச்சிக்கு இஸ்ரா வல் மிஹ்ராஜ் என்று சொல்லப்படுகின்றது.

துபாயில் உள்ள கோட்டைப் பள்ளியில் 25-05-2014 அன்று இரவு 9.00 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை, இஸ்ரா வல் மிஹ்ராஜ் புனித தின சிறப்பு சொற்பொழிவு, சிறப்பு பிரார்த்தனை தொழுகை, பாவ மன்னிப்பு மற்றும் இறை தியானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துவக்கமாக பள்ளி இமாம் உருது மொழியில் உரையாற்றினார்.

இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த காயல்பட்டினம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஹ்மது அப்துல் காதிர் மஹ்லரி சிறப்புரை ஆற்றினார். சொற்பொழிவைத் தொடர்ந்து தஸ்பீஹ் தொழுகை என்று சொல்லப்படும் சிறப்பு பிரார்த்தனை தொழுகையும், தொடர்ந்து பாவ மன்னிப்பு மற்றும் இறை தியானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இறுதியாக இறை பிரார்த்தனையோடு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நள்ளிரவு வரை நடைபெற்ற தொழுகை மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொழுகையின் போது பள்ளியில் இடம் கிடைக்காது படிக்கட்டுகளிலும் மக்கள் நின்று தொழுதனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஸுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள், கீழக்கரை ஒஃபூர் தலைமையில் மஃரூஃப், இஸ்லாமுத்தீன், ஹமீது ரஹ்மான், ஜமால் முஹ்யித்தீன், ஜலால், ஷாஹுல் ஹமீது உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications