For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைகளுக்கு நற்பண்பை வளர்க்கும் திருக்குறள் கதைகள்... ஆங்கில மொழி நடையில் வெளியாகிறது!

குழந்தைகளுக்கு நற்பண்பை வளர்க்கும் திருக்குறள் கதைகள் புத்தகம் ஆங்கில மொழி நடையில் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்படுகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : குழந்தைகளுக்கு நற்பண்பை வளர்க்கும் திருக்குறள் கதைகள் புத்தகத்தை கமலேஷ் சுப்ரமணியம் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் வெளியிடப்பட உள்ளது.

குழந்தைகள் வளர்ப்பில் மிகவும் சவாலான விஷயம் அவர்களுக்கு நற்பண்புகளை புகுத்தி வளர்ப்பது. இவை சாத்தியமாகிறது கதை சொல்லிகள் மூலம், புராணங்கள், இதிகாசங்கள், வரலாறுகள், திருக்குறள் என அனைத்தையும் கதை சொல்லிகளாக குழந்தைகள் மனதில் எளிதில் புரிய வைக்க முடியும். தமிழ் மொழியில் இது போன்ற கதை சொல்லிகள் எண்ணிலடங்காமல் கொட்டிக்கிடக்கின்றன. ஆங்கிலத்தை பொருத்தமட்டில் அயல்நாட்டு கதைகளே புத்தகங்களாக கிடைக்கின்றன அவற்றையே குழந்தைகளும் வாங்கிப் படித்து வருகின்றனர்.

Thirukural Through Tales book by Kamalesh Subramanian to be released on April 14

Recommended Video

    டிகாப்ரியோ பதிவிட்டிருந்த பல்லாவரம் கிணறு இப்போ எப்படி இருக்கு தெரியுமா ?

    இதில் புதிய முயற்சியாக திருக்குறளை கதைகள் வடிவில் ஆங்கில மொழி நடையில் முயற்சித்துள்ளார் கமலேஷ் சுப்ரமணியன். திருக்குறளைப் போன்ற ஒரு உயர் பண்பை வளர்க்கும் நூல் உலகில் எங்குமே இல்லை. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறளை கதை வடிவில் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை செய்துள்ளார் இவர்.

    எமரால்ட் பதிப்பகத்தால் அச்சிடப்பட்டுள்ள இந்த நூலானது தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் தீபா ஹரிஹரன், உலகத் தமிழ் சங்க இயக்குநர் சேகர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விஜயராகவன், மூத்த பத்திரிக்கையாளர் திருவேங்கிமலை சரவணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

    English summary
    kids story book based on Thirukural published by Emeral Publications which was written by Kamalesh Subramanian to be released on 14th of April at Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X