For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாக்லெட் சாப்பிடுங்க… ஜம்முனு வாழுங்க….

Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: சாக்லெட் பிடிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டால் அதற்கான பதில் "இல்லை" என்பதுதான்.சாக்லெட் இல்லாத உலகத்தை கற்பனை கூட செய்து பார்க்க இயலாது.

சுவையான பொருட்களில் முதல் இடத்தை பிடித்துள்ள ஒன்று எப்போதும் சாக்லெட்தான்.காதலர் தினத்தில் முதலில் பரிசளிக்கப்படுவதும் இதுதான்.

அப்படிப்பட்ட சாக்லெட்டில் எவ்வளவோ மருத்துவ குணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதைப் பற்றிய கதைதான் இது.

Why chocolate is good for you…

மருந்தாகும் சாக்லெட்:

சாக்லெட் அதன் தூய படி நிலையில் பல மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவுகிறது. உற்சாக பானமாக பயன்படும். சாக்லெட்,மஞ்சள் காமாலை,இருமல்,அஜீரணம் மற்றும் மூட்டுவலிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இனிப்பான கசப்பு நீர்;

சாக்லெட் என்ற பெயரானது மெக்சிக மொழியில், "ஸாகோலெட்ல்" என்ற வார்த்தையிலிருந்து பெறப்பெட்டது.அதற்கு "கசப்பான நீர்" என்று பொருள்.

மாயன்கள் சாப்பிட்ட சாக்லெட்:

மாயன் காலத்திலேயே கோகோவானது உபயோகிக்கப்பட்டுள்ளது.16வது நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்டெக் மன்னர் தினமும் 50 தடவை சாக்லெட் பானத்தை அருந்தி வந்துள்ளார்.

காதல் பொங்கி வழிய சாக்லேட் சாப்பிடுங்க:

ஒருவர் காதல் வயப்பட்டால் அவரது மூளையில் பினலெத்திலமைன் என்ற வேதிப்பொருள் சுரக்குமாம். அவ்வேதிபொருள் சாக்லெட்டில் உள்ளதாக ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

நேர்மறை எண்ணங்கள் உருவாக்கும் சாக்லெட்:

சாக்லெட் சாப்பிடும் போது நமது மூளையில் நேர்மறையான எண்ணங்கள் உருவாவதாக கண்டறிந்துள்ளனர்.மேலும் உடலுக்கு தேவையான வேதி மூலப்பொருட்கள் அதிக அளவில் சாக்லெட்டில் உள்ளது.இம்மூலப்பொருட்கள் மூளையின் செயல் திறன் மற்றும் இதயத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

டார்க் சாக்லெட்:

சாக்லெட்டின் ஒரு வகையான "டார்க் சாக்லெட்" நமது உடலின் வளர்சிதை மாற்றங்களை ஒழுங்கு படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உடம்புக்கும் இனிப்பானது

மொத்தத்தில் சாக்லெட் சாப்பிட மட்டும் அல்ல,உடலுக்கும் இனிப்பான ஒன்றாகதான் செயல்படுகிறது. பிறகென்ன, சாக்லேட்டை எடுங்க.. கொண்டாடுங்க.!

English summary
chocolate! We're always up for a bounty of chocolates, aren't we? If you ask a die-hard chocolate fan like me, it's hard to imagine a civilization without chocolates!As with most fine things, chocolate has its season. With Valentine's Day around the corner, these age old patrons of love are one of the most celebrated gifts. It may delight your sweetie to know that chocolates are being hailed as the new super-foods, courtesy, its rich antioxidant content and other good-for-you properties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X