அலை கடலே!
உன்னோடு ஓடி வந்து நீ
கால் நனைக்க மனம்
சிலிர்த்து நாம்
நின்ற காலங்கள்!.
இனி!.....
கனவிலேனும் உன்
கரையில் உன் மடியில்
கால் பதிக்க மனம்
வருமா?
உண்ண மீனும்
உனக்குள்
இருந்து,
உணவில் எல்லாம்
உப்பாயிருந்து,
முத்தென்ற
சொத்தாயிருந்த நீதானா?
எம் சொந்தங்களின்
உயிர் குடித்துப்போனது?
"கடல் எமக்கான வளம்
என்றோமே! எம் பலம்
குறைத்து, ஏன் தாயே
பழி சுமந்தாய்? ஏன்
பொங்கி நீ எழுந்தாய்?
எந்த சித்தார்த்தனை
புத்தனாக்கும் முயற்சி
இது?
இந்து சமுத்திர நித்திலம்
இன்று சித்தம் கலங்கி
தவிக்கிறதே! நான்கு
திசையிலும் அரணாயிருந்து
அரவணைத்த நீதானா!
எமை அழவைத்து
போனது?
சுனாமி!..
எங்கள் தேசமே
கேட்டறியாத பெயர்
-உன் பெயர் பொறிக்க
எங்கள் உயிர் முத்துக்களையா
உள்வாங்கி போவது?
"தன் எல்லை கடந்து
அழித்து சென்றால்
அவப்பெயரே மிஞ்சும்"
யாருக்கு உணர்த்த
எங்கள் உறவுகளின் உயிர்
பறித்தாய்?
மனிதன் யாருமிங்கு
மனிதனாய் இல்லை என்று
மதம் பிடித்த யானைபோல்
ஆனாயா நீ!?
நீ கூட அப்பாவிகளை
அழித்தால்.... நியாயமா?
புரியவில்லை!
"நிலம் நடுங்கும்
நீர் பொங்கும்" கலியின்
ஆரம்ப அடையாளமா?
தெரியவில்லை!....
ஆனாலும் கடல்தாயே!...
நீ பிரசவித்து சென்றது எம்
உறவுகளின் இறப்பை
மட்டுமல்ல!
ஈழத்தமிழர்
எம் உணர்வுகளின் நெருப்பை!...
மீனா செல்வரத்தினம்.
ஒட்டாவா.
கனடா
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications