நினைவுகளில் தொலைதல்
ஆழ்கடலின் அலைகரையில்,
வெதுவெதுப்பு வெண்மணலில்
கால் புதையக்
கால்புதைய
நடக்கின்றேன்.
ஊர்..
நினைவுகளில் என்னைத்
தொலைக்கிறேன்.
நீலக் கடல்
நீண்டு..
தொலைதூரத்
தொடுவானத்தின் கீழ்,
வீற்றிருக்கக் கூடும்
எனதருமைச்
சிற்றூர்.
குமுறும் அலைகடலின்
ஆர்ப்பரிக்கும்
ஓசை..
எனது பெருமூச்சுகளை
கொண்டுபோய்ச் சேர்க்கக் கூடும்
அடிக்கடி
கடற்கரையில்
சிப்பி பொறுக்கிய
அறியாச் சிறுவனை
இன்றளவும்
கடல்
நினைவில்
இருத்தக் கூடும்.
காற்று வீசையில்
கலந்து செல்லும்
என் மணத்தை
கரையோரத் தென்னைமரம்
கண்டுபிடிக்கக் கூடும்.
வெண்பனிபோல் கரையும்
வெண்மேகமூட்டம்
என்னூர் போகும்வழி
கடல் குடித்துக்
கருமையாகி
மழையாக
வழியக்கூடும்.
கண்ணின்று வீழும்
துளிகளில்
சில துளிகள்
அலையூடு போய்
என்னூரில் சேரக்கூடும்.
நினைவுகளின் மகிழ்வில்
சுரக்கிறது கண்ணீர்!
ஆழ்கடலின் அலைகரையில்
நினைவுகளில்
என்னைத் தொலைக்கிறேன்.
நினைவலையில்,
கால் புதைய
கால் புதைய
நடக்கிறேன்!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications