அநீதிக்கு எதிராக கவிப் பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும் - நம்பிக்கை கவிதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதியின் நினைவுநாளில் அவரது நினைவால் துயருற்று, வெகுண்டு, சமூக அநீதிகளை ஒடுக்க நாங்கள் பல ஆயிரம் பாரதிகள் உருவாகிக்கொண்டிருக்கிறோம் என சிலிர்த்து மீசைக்காரனின் பேரனாய் பாரதியின் நினைவு நாளில் ஆ.ஜோஷி ஆலன் ஒரு கவிதை வடித்துள்ளார்.

அந்தக் கவிதை இதோ....

An youngster Joshi Alen wrote poetry on Bharathi's death anniversary

பாரதிக்கு ஒரு பாமாலை

நல்ல வேளை நீ மாண்டுவிட்டாய்! - நீ

பார்க்க துடித்த சமுதாய மாற்றங்கள் - இப்போது

மாண்டு கொண்டே இருக்கின்றது

ஊழல் என்னும் உறைபனிக்குள்

உறைந்து கிடைக்கும் அதிகார

வர்க்கங்கள் உதிர்ந்து போகும்

இலையுதிர் காலம் எப்போது என

ஏங்கி கிடக்கும் உள்ளங்கள் உன்னை

இன்று நினைவு கூறுகின்றன

என் அன்புத் தங்கை

அனிதாவின் மரணத்திற்கு

ரெண்டு கெட்டானிடம் நீதி

கேட்கும் சமுதாயத்தின் பேராசையை

நினைத்து பேதலித்து நிற்கின்றேன்

ஆட்சியை அடமானம் வைத்து

அரசில் பிழைப்போர்க்கு அறம்

கூற்றாகும் என்னும் நீதி அறியாத

பதறுகளாய் பிதற்றும் அதிகார வர்க்கமே

உன் அஸ்தமனம் ஆரம்பித்துவிட்டது

பாரதி இல்லையென்று நினைத்தாயோ - நீ

பாரதி இல்லையென்று நினைத்தாயோ

பாட்டுக்காரனின் பார்வைகள் கொண்ட

பல ஆயிரம் இளைஞர்கள் என்னை போல

பலருண்டு உனக்கு கிலி காட்ட

மண்ணின் விடுதலை கவிஞன் தான்

மாண்டுவிட்டான் அவனது எழுச்சி கவிகள்

மாளவில்லை - கவிப்பூக்கள் பூத்துக்கொண்டே

இருக்கும் காரணம் பாரதி தன் "க" வியில்

"விதை" யை விதைத்துவிட்டான் அது இன்று

கவிதை" யாய் பூத்து கொன்டே இருக்கும்!
நீ விட்டு சென்ற பணியை தொடரும்

ஆ. ஜோஷி ஆலென்

(மீசைக்காரனின் பேரனாய்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An youngster Joshi Alen, who got angry on social moralities and injustice, saying strongly we thousands of Bharathi are coming to destroy the injustice.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற