For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தரித்திரத்தையே சுவாசித்து.. பசியையே புசித்து.. சிரிக்க வைத்த சார்லி சாப்ளின்!

சார்லி சாப்ளினின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது

Google Oneindia Tamil News

தொளதொளத்த கால்சட்டை..
இறுக்கமான மேலாடை...
பந்தாட்டக்காரர் தொப்பி..
பெரிய ஷூ..
பல்குச்சி அளவுக்கு மீசை..!

நடையழகு நாயகனே..!
கலைகளின் வித்தகனே..!
மௌன படங்களின் விடிவெள்ளியே..
கண்ணீரையும் புன்னகையால்
வென்ற கலைஞன் சார்லி சாப்ளின்!

charlie chaplin death anniversary today

உன் இளம் வயதில்தான்
எவ்வளவு சோக வடுக்கள்?
வறுமைக் கோடும் உனக்காக
கண்ணீர் சொரிந்ததே..!

தரித்திரத்தையே சுவாசித்து..
பசியையே புசித்த..
உன் வாழ்க்கையில்தான்
எவ்வளவு எவ்வளவு பொத்தல்கள்..!

பொத்தல்கள் விழ.. விழ..
புல்லாங்குழலாய் மாறினாயே..!
உள்ளுக்குள் அழுதாய்..
உணர்ச்சியாய் படைத்தாயே..!

மேலோட்ட நகைச்சுவையுடன்
வலிகளின் வரலாறையுமல்லவா
வெளிப்படுத்தினாய்..!

புகழின் சுயநினைவே
இல்லாமல் வாழ
உன்னால் மட்டுமே சாத்தியம்..!

charlie chaplin death anniversary today

ஒரே சமயத்தில்
அழவும்.. சிரிக்கவும் வைக்க தெரிந்த
அசாதாரண கலைஞன் நீ..!

உன் இதயத்திற்கும்
இயக்கத்திற்கும்
இடைவெளி அதிகமில்லை..!

ஆண்மைக்குரிய மீசையையும்
நகைச்சுவையாக காட்டியது
உன் அதீத தைரியம்தான்..!

விசித்திர கலவை
குணம்கொண்ட நீ
ஒரு மௌனமொழி கலைஞன்..!

உணர்தல்.. புரிதலில் மட்டுமே
சமதர்மத்தை உணர்த்தியவன் நீதான்..
ரசிகர்களின் எல்லாவித
சமூக கட்டுப்பாடுகளையும்
உடைத்தெறிந்தவன் நீ மட்டுமே..!

charlie chaplin death anniversary today

மௌனம் மிகச்சிறந்த மொழி
இதை உன்னைவிட
வேறு யாரால் உணர்த்த முடியும்..
உண்மைதான்..
சிரிக்காத நாட்கள் எல்லாம் வீணே..!

உன் படங்கள் ஒவ்வொன்றும்
மலை போன்றது..
அதை முயன்று.. குடைந்தால்..
பிரமிப்பு நீளும்..!

அன்றைய உன் மௌனம்தான்
இன்றுவரை பேசுபொருளாகி உள்ளது

உன் கடைசி சிரிப்பை
இன்றும் தேடுகிறோம்..
உன்னைபோல் மௌனமாகவே!

தொளதொளத்த கால்சட்டை..
இறுக்கமான மேலாடை...
பந்தாட்டக்காரர் தொப்பி..
பெரிய ஷூ..
பல்குச்சி அளவுக்கு மீசை..!

நடையழகு நாயகனே..!
கலைகளின் வித்தகனே..!
மௌன படங்களின் விடிவெள்ளியே..
கண்ணீரையும் புன்னகையால்
வென்ற கலைஞன் சார்லி சாப்ளின்!

உன் இளம் வயதில்தான்
எவ்வளவு சோக வடுக்கள்?
வறுமைக் கோடும் உனக்காக
கண்ணீர் சொரிந்ததே..!

தரித்திரத்தையே சுவாசித்து..
பசியையே புசித்த..
உன் வாழ்க்கையில்தான்
எவ்வளவு எவ்வளவு பொத்தல்கள்..!

பொத்தல்கள் விழ.. விழ..
புல்லாங்குழலாய் மாறினாயே..!
உள்ளுக்குள் அழுதாய்..
உணர்ச்சியாய் படைத்தாயே..!

மேலோட்ட நகைச்சுவையுடன்
வலிகளின் வரலாறையுமல்லவா
வெளிப்படுத்தினாய்..!

புகழின் சுயநினைவே
இல்லாமல் வாழ
உன்னால் மட்டுமே சாத்தியம்..!

ஒரே சமயத்தில்
அழவும்.. சிரிக்கவும் வைக்க தெரிந்த
அசாதாரண கலைஞன் நீ..!

உன் இதயத்திற்கும்
இயக்கத்திற்கும்
இடைவெளி அதிகமில்லை..!

ஆண்மைக்குரிய மீசையையும்
நகைச்சுவையாக காட்டியது
உன் அதீத தைரியம்தான்..!

விசித்திர கலவை
குணம்கொண்ட நீ
ஒரு மௌனமொழி கலைஞன்..!

உணர்தல்.. புரிதலில் மட்டுமே
சமதர்மத்தை உணர்த்தியவன் நீதான்..
ரசிகர்களின் எல்லாவித
சமூக கட்டுப்பாடுகளையும்
உடைத்தெறிந்தவன் நீ மட்டுமே..!

மௌனம் மிகச்சிறந்த மொழி
இதை உன்னைவிட
வேறு யாரால் உணர்த்த முடியும்..
உண்மைதான்..
சிரிக்காத நாட்கள் எல்லாம் வீணே..!

உன் படங்கள் ஒவ்வொன்றும்
மலை போன்றது..
அதை முயன்று.. குடைந்தால்..
பிரமிப்பு நீளும்..!

அன்றைய உன் மௌனம்தான்
இன்றுவரை பேசுபொருளாகி உள்ளது

உன் கடைசி சிரிப்பை
இன்றும் தேடுகிறோம்..
உன்னைபோல் மௌனமாகவே!

English summary
English comic actor, filmmaker, and composer, world famous actor charlie chaplin death anniversary today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X